20091216

பொக்கிஷம் படத்தின் பாடல் வரிகள்






பாடலாசிரியர்: யுகபாரதி
இசை: சபேஷ் - முரளி


கனவு சில சமயம்
கலையும் நிலையும் உண்டு
முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு
அதுவும் சில சமயம் ஜெயிக்க வழிகள் உண்டு
விடியும் பொழுதுவரை விழித்திரு
இது யூகிக்க முடியாகக் கணிதமே
ஒரு போருக்குப் போகும் பயணமே
இன்பம் தேடும் காதல் ஏற்றிடாத உலகுடா
துன்பம் நீங்கிப் போகும் தோல்விகூட அழகுடா
ஒரு மெல்லிய கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே


தவிப்பு ஒரு புறமும் துடிப்பு மறு புறமும்
தொடங்கும் இதுவும் ஒரு யாத்திரை
இரவு துயிலிருக்க அலையில் புறல்கிறது ஆண்கலை
இந்த வாழ்வில் ஏதும் நேரலாம்
அந்த ஈசன் தீர்ப்பைக் கூறலாம்
இன்றுப்போல நாளை இல்லை என்றும் ஆகலாம்
நல்ல நாளும் நேற்று போனதென்று ஏங்கலாம்
ஒரு மெல்லிய கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே




பாடியவர்: பிரசன்னா





அழகு முகம் மலர்ந்து
தாயின் மடி கடந்து
உலகம் ரசித்திருக்கும் குழந்தையே
எதிலும் மனம் உடைந்து
வெறுமை என உணர்ந்து
தனிமை ருசித்திருக்கும் முதுமையே
சிலர் வாழ்க்கை இன்று தொடங்குமே
வரும் நாளை எண்ணி இயங்குமே
நாம் வாழும் வாழ்க்கை நீண்ட தூர பயணமே
அதை வாழ்ந்து பார்க்க தூண்டும் நம்மை உலகமே
தினம் ஒவ்வொரு நொடியிலும் பயணமே
வரும் ஒவ்வொரு விடியலும் பயணமே

புதிய தோற்றங்களும் புதிய மாற்றங்களும்
கனவை தருகிறது வாழ்க்கையில்
புதிய கேள்விகளும் புதிய தேடல்களும்
முழுமை அடைகிறது பூமியில்
இங்கு நீயும் நானும் பயணியே
வரும் வாழ்வும் தாழ்வும் பயணமே
இது காலம் தோறும் மாறிடாமல் தொடருமே
இதை காதலோடு ஏற்க வேண்டும் எவருமே




பாடியவர்: பிரசன்னா









சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி


உறவைத் தொடர்ந்து வரும் உயிர்கள் பழகவரும்
இனிய கவிதை என நினைக்கிறேன்
அவளின் அணுகுமுறை பழகும் இயல்பு நிலை
கலந்த நிமிடங்களை ரசிக்கிறேன்
சில நாட்கள் தீண்டும் நினைவிலே
பள்ளி வாழ்க்கை மீண்டும் மனதிலே
அவள் பேசும் பேச்சைக் கேட்கக் கேட்கப் புதுமையே
அந்த நேரம் மீண்டும் வாய்த்திடாத இனிமையே
(சிறு புன்னகை...)


வரவு செலவுகளில் குறையும் பொழுதுகளை 
புதிய உறவுகளில் நிறைக்கிறேன்
அறிவு வெளியுலகில் அடையும் 
அவஸ்தைகளைப் பொழியும்
நிலவொளியில் பொசுக்கினேன்
இன்பம் யாவும் காட்டும் மனத்திரை
நம்மை மாற்றும் காலம் வகுப்பறை
இதில் பாடம் கேட்கும் 
நீயும் நானும் ஒருவனே
நம்மைப்பேச்சில் யார்க்கும் தோழன் யாரு 
இறைவனே..
(சிறு புன்னகை..)


பாடியவர்: பிரசன்னா







உலகம் நினைவில் இல்லை
உறங்க மனமும் இல்லை
முழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன்
மதியவெயில் அடித்தும் மனதில் மழைப்பொழிந்த
இனிய மணித்துளியில் குளிக்கிறேன்
கண்ணை மோதும் காற்றில் அவள் முகம்
நெஞ்சை மேயும் பாட்டில் அவள் முகம்
பல கோடி பூக்கள் சேர்ந்துப் பூக்கும் அனுபவம்


இது காதலின் அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா
இது காதலின் அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா


எனது மனக்குகையில் புதிய ஒளிபரவ
புவியில் மறுப்படியும் பிறக்கிறேன்




பாடியவர்கள்: பிரசன்னா, மஹதி









மூன்று நாள் ஆகுமே பேசவே உன்னிடம்
அதுவரை ஆவலை தாங்குமா என் மனம்
என் நினைவோடு நீ துணை இருப்பாயடி
உன் அருகாமையில் வலிதொடராதடி
குரல் கேட்கும் வரை புவி சுழலாதடி


காலை நீ மாலை நீ காண்கிற காட்சி நீ
வேலை நீ வேள்வி நீ வீட்டிலே யாவும் நீ
நீ பேசாமலே மொழிப் பகையானதே
குறையில்லாமலே மனம் இசைப்பாடுதேன்
ஒரு யுகமாயினும் இதை இரசிப்பேனடி



பாடியவர்: கார்த்திக்









அஞ்சல் பெட்டியை கண்டதுமே கண்கள் சிரிப்பதேன்
என் நெஞ்சுக்குள்ளேப் பட்டாம் பூச்சி றெக்கை விரிப்பதேன்
துள்ளித்திரிந்த எந்தன் நாட்கள் தயங்கி நடப்பதேன்
என் தோளுக்குமேலே தூரிகைத்தீண்டும் உணர்வு முளைப்பதேன்
இராட்டினங்கள் மூளைக்குள்ளே சுற்றி சுழல்வதேன்
என் நாடித்துடிப்பு நூறு மடங்காய் நொடியும் உயர்வதேன்
பம்பரங்கள் காலில் சுழலும் பரப்பரப்பு ஏன்
என் அங்கம் எங்கும் புதுப்புது மின்னல் உருவெடுப்பதேன்
(அஞ்சல்..)


கொஞ்ச நாளும் மனமே உனக்கு ஏன் நடந்தது
நான் ஓய்வில்லாமல் தத்தித்தாவ உலகம் மறந்தது
உச்சந்தலையை வானவில்லும் துவட்டுகின்றது
என் உள்ளங்கையில் ரேகைப் பூவாய் மலருகின்றது
உள்ளத்துணையை வாசக்காற்றில் சலவை செய்தது
நான் ஒவ்வொரு நொடியும் பிறப்பது போல கவிதை சொன்னது
கனவில் மிதந்து நடனம் ஆட கால் நினைத்தது
நான் கரையக் கரைய மேலேப் போக வால் முளைத்தது
என்னை நானே இரசித்துக்கொள்ளும் நிலைமையானது
இது நித்தம் நிகழும் ஆனால் கூட புதுமையானது




பாடியவர்: கார்த்திக்








மொழி இல்லாமலே இதை சொல்வான் இனி
உயிர் இல்லாமலே இதைக் காண்பான் இனி
வாசமே போனப்பின் பூக்களேப் பூப்பதேன்
சுவாசமே வந்தபின் மூச்சிலே காற்று ஏன்
ஒரு கண்ணாடிப் போல் நான் உடைந்தால் என்ன


வழி இல்லாமலே எங்கு செல்வான் இனி
உயிர் இல்லாமலே என்ன செய்வான் இனி
ஓடையே காய்ந்தப்பின் மீன்களே
வானமே வீழ்ந்தப்பின் உடல் ஏன் வாழ்வதேன்
அட பூலோகமே இனி அழிந்தால் என்ன


பாடியவர்: மது பாலகிருஷ்ணன்







ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஹோ
ஓஹோஹோ
நானா நானனா நானனா


ஓஹோஹோ தீர்ந்ததே பெருங்கடல் தாகமே
ஓஹோஹோ சேர்ந்ததே மழைத்துளி மேகமே
அட மின்னல் இங்குத் தன்னைவிட்டுப் போகுமே
இந்த மண்ணில் இனி ஒளிப்பஞ்சம் தீருமே
ஓஹோஹோ மின்மினி பூச்சிகள் பூக்களாய்
ஓஹோஹோ வெண்ணிலா பார்வைகள் கூச்சமா


நான் சந்தோஷங்கள் பெற்றெடுத்தப் பிள்ளையே
இந்த நட்புக்குள்ளேத் தப்பு ஒன்றும் இல்லையே
ஓஹோஹோ என்னிடம் சிறகில்லை பறக்கிறேன்
ஓஹோஹோ நெல்மணி போல நான் உழைக்கிறேன்


பாடியவர்: விஜய் ஜேசுதாஸ்






3 comments:

charles said...

super movie

ஷகிலா said...

Thank you for your visit charles

வியாசன் said...

what a story

Post a Comment