Showing posts with label செல்லமே. Show all posts
Showing posts with label செல்லமே. Show all posts

20100110

ஆரிய உதடுகள் உன்னது...





ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்தப் போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே
(ஆரிய..)

இதில் யார் தோல்வியுறும் போதும்
அதுதான் வெற்றி என்றாகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும்
மனக் கிடங்குகள் தீப்பற்றித் தித்திக்கணும்

எத்தனை உள்ளது பெண்ணில்
அட எது மிகப் பிடித்தது என்னில்
பகல் பொழுதின் பேரழகா
ராத்திரியின் பூரணமா
மின்னல்கள் சடுகுடு ஆடும் கண்ணா கண்ணா
மேலாடை மேகம் மூடும் நெஞ்சா நெஞ்சா



ஒவ்வொரு பாகமும் பிடிக்கும்
உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்
மோகம் வரும் தருணங்களில்
முனகலிடும் ஒலிப்பிடிக்கும்
கட்டில் மேல் எல்லாம் களைந்த பின்னே பின்னே
களையாத கொலுசு ரொம்ப பிடிக்கும் பிடிக்கும்

என் நாயகா எனைப் பிரிகையில்
என் ஞாபகம் தலை காட்டுமா
உன் ஆண் மனம் தடுமாறுமா
பிற பெண்கள் மேல் மனம் போகுமா
கண்களே நீயாய் போனால் வேறு பார்வை வருமா
(ஆரிய..)

தேவதை புன்னகை செய்தால்
சிறு தேப்பிறை முழு நிலவாகும்
குறைகுடமாய் நானிருந்தேன்
நிறைகுடமாய் ஏன் நிறைந்தேன்
உன்னோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய்
உயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய்

ஜீவித நதியென விரைந்தாய்
என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்
பிறவியினை தாய் கொடுத்தாள்
பிறந்த பயன் நீ கொடுத்தாய்
ஆணுக்கு முழுமை என்ன
ஆண் தான் ஆண் தான்
பெண்ணுக்கு முழுமை என்ன
ஆண் தான் ஆண் தான்

அடி காற்றினிலே வான் நிறையுது
நம் காதலால் உயிர் நிறையுது
வளர் ஜோதியே எந்தன் பாதியே
நீ என்னத்தான் எதிர்ப்பார்க்கிறாய்
ஜீவனின் மையம் தேடி
கைகள் மீண்டும் வருமா?
(ஆரிய..)



பாடியவர்கள்: ஹரிஹரன், ஸ்வர்ணலதா
படம்: செல்லமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்





20091210

என் சோனாலி சோ சோனாலி...

என் சோனாலி சோ சோனாலி
மை சோனாலி சோ சோனாலி




காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்ட வந்தால் திட்டி திட்டி தித்தித்தாய்
(காதலிக்கும்..)

சந்திர சூரியர் எழுகையிலே
உன் முக ஜாடைகள் தெரிகிறதே
பூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே
சரிகிறதே சரிகிறதே
அடி விண்ணும் மண்ணும் உனக்குள்ளே விளம்பரமோ
நீ வெளிச்சத்தில் செய்து வைத்த ஒளி சிற்பமோ
ஹேய் மன்மத மொட்டோ நான் வருடும் காற்றோ
என் காதலி காதலி காதலி காதலி
என்னை காதலி காதலி காதலி
(காதலிக்கும்..)

உன்முகம் கொண்ட பருவினிலும்
விண்மீன் ஒளிகள் வீசுதடி
கோபம் வழியும் வேளையிலும்
இதயம் கண்ணில் மின்னுதடி
மின்னுதடி என்னை கொல்லுதடி
எங்கே நின்று காணும் போதும் வானம் ஒன்று தான்
அட எந்த பக்கம் பார்க்கும் போதும் பெண்மை நன்றுதான்
உயிர் விடும் முன்னே என்னை காதலி பெண்ணே

காதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும்
ஏமாந்த பெண்ணை தேடி போயா
உன் சட்டையோடு ஒட்டிக் கொள்ளும் பட்டை ரோஜா நானல்ல
முள்ளோடு தேனும் இல்லை போயா
ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை
உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை
நீ கல்லை தந்து கனியோ என்று
காதல் செய்வது வீண் வேலை

என் காதலி காதலி காதலி காதலி..



பாடியவர்கள்: கேகே, மஹதி
படம்: செல்லமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்