Showing posts with label வெயில். Show all posts
Showing posts with label வெயில். Show all posts

20100105

உருகுதே மருகுதே...




உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே...

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா

சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா

ஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே

சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா... ஓ...

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

ஏ அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு

ஏழு கடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான்
என் கருத்த மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு

நாம சேர்ந்து வாழும் காட்சி கோடி பார்க்கிறேன்



காட்சி யாவும் நிசமா மாற கூட்டி போகிறேன்

சாமி பார்த்துக் கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்கே.. ஏ

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான் வாழுறேன்

கூரைப்பட்டுச் சேலைதான் வாங்கச் சொல்லி கேட்கிறேன்
கூடுவிட்டு கூடுபாயும் காதலால சுத்துறேன்

கடவுள்கிட்ட கருவறை கேட்டேன் உன்னைச் சுமக்கவா

உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா

ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன்

ஓ... உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே

சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா...
ஓ... உருகுதே


பாடியவர்கள்:  ஷங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல்,
படம்: வெயில்
இசை: ஜி.வி. பிரகாஷ்