Showing posts with label காக்க காக்க. Show all posts
Showing posts with label காக்க காக்க. Show all posts

20100106

உயிரின் உயிரே ...




உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இறைக்கும் முழுதும் வேர்க்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்
காலை பனியாக என்னை வாரிக்கொண்டாய்
நேரம் கூட எதிரியாகிவிட
யுகங்களாக வேடம் மாறிவிட
அணைத்து கொண்டாயே
பின்பு ஏனோ சென்றாய்
(உயிரின்..)

சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட
வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன்
வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னையன்றி யாரை தேடும்
விலகி போகாதே
தொலைந்து போவேனே நான் நான் நான்..
(உயிரின்..)

இரவின் போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன் உன்னிடம்
வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன்
வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொறு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ
விரல்கள் தாராயோ நீ நீ நீ..
(உயிரின்..)


பாடியவர்கள்: கேகே, சுசித்ரா
படம்: காக்க காக்க
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்