20110709

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள ...


உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள
வச்சிருக்கான் இந்தப் புள்ள
வீணாக இவன் மனசை கிள்ளாதே
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள
நீயாக இவன் மனசை கொல்லாதே
நீ கொல்லாதே 
ஓ ஒ ஒ ஓ கொல்லாதே

என்ன சொல்ல போற நீ
என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ
எப்ப சொல்ல போற

என்ன சொல்ல போற நீ
என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ
எப்ப சொல்ல போற

காத்திருப்பேன் காத்திருப்பேன் ஆறு மாசம் தான்
கண்முழிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம் தான்
என்னமோ நடக்குது
இதயம் வலிக்குது
மனசு தவிக்குது
உன்னோடைய வார்த்தைக்காக

என்ன சொல்ல போற நீ
என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ
எப்ப சொல்ல போற

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள
வச்சிருக்கான் இந்தப் புள்ள
வீணாக இவன் மனசை கிள்ளாதே
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள
நீயாக இவன் மனசை கொல்லாதே
கொல்லாதே கொல்லாதே

சின்னபுள்ள நேசம் இது பச்சபுள்ள பாசம் இது
என் மனசை தாக்கியது உன்னால உன்னால
ஜாதி மதம் பார்க்கலையே சம்மதத்தை கேட்கலையே
காதல் என்று ஆகிடுச்சு தன்னாலே தன்னாலே

நெசமா நெசமா நெஞ்ச்சுக்குள்ள நான் ஒளிஞ்சேன்
உன்னோடைய வார்த்தைக்காக

என்ன சொல்ல போற
என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற
எப்ப சொல்ல போற

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள
வச்சிருக்கா இந்தப் புள்ள
வீணாக இவன் மனசை கிள்ளாதே
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள
நீயாக இவன் மனசை கொல்லாதே
நீ கொல்லாதே 

ஓ வெட்டருவாள் தூக்கிகிட்டு
வெட்டிப்பயல் போலிருந்தேன்
வெட்கப்பட்டு நான் நடந்தேன் உன்னாலே உன்னாலே
கட்டைகம்பை தூக்கிகிட்டு கண்ட படி நான் திரிஞ்சேன்
கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னாலே

புதுசா புதுசா மாறி இருக்கேன் தேறி இருக்கேன் 
உன்னேடய பார்வையாலே

என்ன சொல்ல போறாய் நீ
என்ன சொல்ல போறாய்
எப்ப சொல்ல போறாய் நீ
எப்ப சொல்ல போறாய்

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள
வச்சிருக்கா இந்தப் புள்ள
வீணாக இவன் மனசை கிள்ளாதே
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள
நீயாக இவன் மனசை கொல்லாதே
நீ கொல்லாதே

பாடியவர்கள்: தேவி ஸ்ரீபிரசாத், கார்த்திகேயன்
படம்: வேங்கை
இசை: தேவி ஸ்ரீபிரசாத்
பாடல்: விவேகா

20110708

ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா...
ஹே... ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நான் கேட்டத எல்லாம் தருவா தருவா
ரோசாப்பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா

அடி ஆத்தி... அடி ஆத்தி என் கண்ணுல... என் கண்ணுல
சில நாளா... சில நாளா அவ தெரியல... அவ தெரியல
வேறேதும் நா பாக்கல வாழவே இப்ப பிடிக்கல
வருவா அவ வருவா எனை தாலாட்ட

ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நான் கேட்டத எல்லாம் தருவா தருவா
ரோசா பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா

காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே
காத்துக் கிடக்குறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே
கட்டுப்பாட்டதான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி

ஹேய் ஆணாய் நான் வந்ததும்
அடி பெண்ணாய் நீ வந்ததும்
எங்கேயோ முடிவானது
என்னை நீ பார்த்ததும்
அடி உன்னை நான் பார்த்ததும்
முன் ஜென்ம தொடர்பானது
யார் வந்து தடுத்தாலும்
என் வாழ்வின் எதிர்காலம் நீ தானடி
கண் மூடி படுத்தாலும்
கனவெல்லாம் நீதானே
இறந்தாலும் இறக்காதது இந்த காதலே
புரியாதது புதிரானது
அழிந்தாலுமே அழியாதது நிலையானது

காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே
காத்துக் கிடக்குறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே
கட்டுப்பாட்டதான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி

காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே
காத்துக் கிடக்குறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே
கட்டுப்பாட்டதான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி

பாடியவர் : ஹரிசரன்
படம் : அவன் இவன் 
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் : நா. முத்துக்குமார்

20110707

ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல...ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பார்த்தாலே ஒளிஞ்சுக்கிறியே பெண்னே

ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பார்த்தாலே ஒளிஞ்சுக்கிறியே பெண்னே

பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போல
என்னைப்பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்னே

உன்னை நான் பார்த்தேன் நான் ரசித்தேன் நான் திண்டாடினேன்
உன்னை நான் தொடர்ந்தேன் நான் உணர்ந்தேன் நான் காதல் கொண்டேன்
என் வாழ்க்கையின் வாசலே நீயேதானடி ஓ ஓ ஓ ஓ ஓ

ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பார்த்தாலே ஒளிஞ்சுக்கிறியே பெண்னே

பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போல
என்னைப்பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்னே

உதட்டை சுழித்து சிரிக்கும் பொழுது உயிரில் வெடிவைக்கிறாய்
ஒவ்வொரு வார்த்தை முடியும் பொழுதும் எதற்கு பொடி வைக்கிறாய்
கொலுபொம்மை போலிருக்கிறாய் நீ கொடிமுல்லை போல் நடக்கிறாய்
அடிக்கடி நகம் கடிக்கிறாய் என்னை மயக்கி மாயம் செய்தாய்
நான் ராத்திரி பார்த்திடும் வானவில் நீ ஓ ஓ ஓ ஓ ஓ 

காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பார்த்தாலே ஒளிஞ்சுக்கிறியே பெண்னே

பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போல
என்னைப்பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்னே

பழசை மறைக்க நினைக்கும் உனக்கு நடிக்க வரவில்லையே
உருவம் மறந்து புருவம் விரிய சிறுவன் நான் இல்லையே
எதற்கு நீ என்னை தவிர்க்கிறாய் என் எதிரிலே முகம் சிவக்கிறாய்
அகமெல்லாம் பொய் பூசியே என்னை அருகில் சேர்க்க மறுத்தாய்
என் ஆவியை தாக்கிடும் தீயே நீயடி ஓ ஓ ஓ ஓ ஓ 

காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பார்த்தாலே ஒளிஞ்சுக்கிறியே பெண்னே

பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போல
என்னைப்பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்னே

பாடியவர்: கார்த்திக்
படம்: வேங்கை
இசை: தேவி ஸ்ரீபிரசாத்
பாடல்: விவேகா

தீ இல்லை புகை இல்லை ...தீ இல்லை புகை இல்லை 
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே 
நூல் இல்லை தறி இல்லை 
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே 
பூ இல்லை மடல் இல்லை 
புது தேனை பெய்கிறாய் உயிரிலே 
என்னை உன்னிடம் இழக்கிறேன் 
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் 
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய்

ஓ ஓ ஓ...ஹோ...ஓ... விலையாய் தந்தேனே என்னை 
ஓ ஓ ஓ...ஹோ...ஓ...வாங்கிக் கொண்டேனே உன்னை 
ஓ ஓ ஓ...ஹோ...ஓ...ஆடை கொண்டதோ தென்னை
           
வெகு நாளாய் கேட்டேன்  
விழி தூறல் போட்டாய் 
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே 
விலகாத கையை தொட்டு 
விழியோர மையை தொட்டு 
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே 

விலக்கிய கனியை விழுங்கியது 
விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது
இது ஒரு சாட்சி போதாதா 
கண்கள் மோதாதா காதல் ஒதாதா  

தீ இல்லை புகை இல்லை 
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே  
நூல் இல்லை தறி இல்லை 
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே 
பூ இல்லை மடல் இல்லை 
புது தேனை பெய்கிறாய் உயிரிலே 
என்னை உன்னிடம் இழக்கிறேன் 
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் 
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய்      

ஓ புனல்மேலே வீற்று 
பனி வாடை காற்று  
புனைந்தது நமக்கொரு புது பாட்டு 
கடற்கரை நாரை கூட்டம் 
கரைந்திங்கு ஊரை கூட்டும் 
இருவரும் நகர்வலம் வரும் பார்த்து 
சிலு சிலு வென்று குளிர் அடிக்க 
தொடு தொடு என்று தளிர் துடிக்க 
எனக்கொரு பார்வை நீதானே  
என்னை எடுப்பாயா உன்னில் ஒளிப்பாயா

தீ இல்லை புகை இல்லை 
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே 
நூல் இல்லை தறி இல்லை 
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே 
பூ இல்லை மடல் இல்லை 
புது தேனை பெய்கிறாய் உயிரிலே 
என்னை உன்னிடம் இழக்கிறேன் 
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் 
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய்

ஓ ஓ ஓ...ஹோ...ஓ... விலையாய் தந்தேனே என்னை 
ஓ ஓ ஓ...ஹோ...ஓ...வாங்கிக் கொண்டேனே உன்னை 
ஓ ஓ ஓ...ஹோ...ஓ...ஆடை கொண்டதோ தென்னை


பாடியவர்கள்:நரேஷ் ஐயர், மகதி, கோபால் ராவ், முஹேஷ், ரானா ரெட்டி
படம்: எங்கேயும் காதல்
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்.
பாடல்: வாலி.

20110706

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

மீன் கொத்தியப்போல நீ கொத்துரதால
அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா
உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா
தலைகாலுப் புரியாம தரைமேல நிக்காம
தடுமாறிப் போனேனே நானே நானே 

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா
உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா
நான் தலைகாலுப் புரியாம தரைமேல நிக்காம
தடுமாறிப் போனேனே நானே நானே 

உலர் தட்ட மரமாகவே தலை சுத்திப்போகிறேன்
நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்
உனைத்தேடியே மனம் சுத்துதே
ராக்கோழியாய் தினம் கத்துதே
உயிர்நாடியில் பயிர் செய்கிறாய்
சிறுபார்வையில் எனை நெய்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி சதிகாரி எப்படி செஞ்ச என்ன
நான் சருகாகிப் போனேனே பார்த்த பின்னே
நான் தலைகாலுப் புரியாம தரைமேல நிக்காம
தடுமாறிப் போனேனே நானே நானே 
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி நெஞ்சின் நிலாவிலே தேன் அள்ளி ஊத்துற
கையில் ஏதும் இல்லாமலே உசுரையேக் கோர்க்குற
எனை ஏனடி வதம் செய்கிறாய்
எனை வாட்டிடும் உலை வைக்கிறாய்
கடவாயிலே எனை மேய்கிறாய்
கண் ஜாடையில் எனைக்கொல்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன் கொத்தியப்போல நீ கொத்துரதால
அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா
உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா
தலைகாலுப் புரியாம தரைமேல நிக்காம
தடுமாறிப் போனேனே நானே நானே 


பாடியவர்: G.V. பிரகாஷ் குமார்
படம்: ஆடுகளம்
இசை: G.V. பிரகாஷ் குமார்
பாடல் : சினேகன்

20110705

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணாலே என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ளே ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா
ஏ பொட்ட காட்டுலே ஆலங்கட்டி மழை பெய்ஞ்சு
ஆறொன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஒட்டிக்கிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

ஏ பவுடர் டப்பா தீர்ந்து போனதே
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனதே
நான் குப்பறதான் படுத்து கிடந்தேன்
என்ன குதிர மேல ஏத்திவிட்டாயே
ஒண்ணும் சொல்லாம உசிர தொட்டாயே
மனச இனிக்க வச்ச சீனி மிட்டாயே
ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணாலே என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ளே ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா

ஏ கட்ட வண்டி கட்டி வந்துதான்
அவ கண்ணழக பாத்து போங்கடா
அட கட்டு சோறு கட்டி வந்துதான்
அவ கழுத்தழக பாத்து போங்கடா
கத்தாழ பழச்சிவப்பு முத்தாத இளஞ்சிரிப்பு
வத்தாத அவ இடுப்பு நான் கிறுக்கானேன்
ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணாலே என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ளே ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா

அட ரேஷன் கார்டில் பேர ஏத்துவேன்
ஒரு நாள் குறிச்சி தட்டு மாத்துவேன்
ஏ ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மெண்ணு தின்னாலே என்ன ஒருவாட்டி
ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணாலே என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ளே ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா
அட பொட்ட காட்டுலே ஆலங்கட்டி மழை பெய்ஞ்சு
ஆறொன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஒட்டிக்கிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவ தான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

பாடியவர்: வேல்முருகன்
படம் : ஆடுகளம்
இசை : G.V. பிரகாஷ்
பாடல்: யேகாதசி