20100320

ஒரு புன்னகை பூவே...




ஒரு புன்னகை பூவே சிறு பூக்களின் தீவே

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு

ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே
நீ என்னை மட்டும் காதல் பண்ணு
என் வாலிப நெஞ்சம் 
உன் காலடி கெஞ்சும்
சிறு காதல் பிச்சை போடு கண்ணு

நான் கெஞ்சி கேட்கும் நேரம்
உன் நெஞ்சின் ஓரம் ஈரம்
ஆ அச்சோ அச்சோ காதல் வாராதோ

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு


சூரியன் வாசல் வந்து ஐஸ்க்ரீம் கொடுக்கும்
உடாதம்மா விடாதம்மா
சந்திரன் உள்ளே வந்து சாக்லெட் கொடுக்கும்
சுத்தாதம்மா ரீலுதாம்மா

உன் படுக்கை அறையிலே
ஒரு வசந்தம் வேண்டுமா
உன் குளியல் அறையிலே
விண்டர் சீசன் வேண்டுமா
நீ மாற சொன்னதும்
நான்கு சீசனும் மாற வேண்டுமா
லவ் பண்ணு 

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு
லவ் பண்ணு லவ் பண்ணு


என்பது ஆண்டுகள் இளமை வேண்டுமா
மெய்யாகுமா மெய்யாகுமா
சொடக்கொன்று போட்டதும் சொர்க்கம் வேண்டுமா
மெய்யாகுமா மெய்யாகுமா
அட வெள்ளை வெள்ளையாய்
ஓர் இரவு வேண்டுமா
புது வெளிச்சம் போடவே
இரு நிலவு வேண்டுமா
உன்னை காலை மாலையும்
சுற்றி வருவது காதல் செய்யவே
லவ் பண்ணு ஐயோ பண்ணு

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு ஐயோ பண்ணு

ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே
நீ என்னை மட்டும் காதல் பண்ணு
என் வாலிப நெஞ்சம் 
உன் காலடி கெஞ்சும்
சிறு காதல் பிச்சை போடு கண்ணு


நீ கெஞ்சி கேட்கும் நேரம்
என் நெஞ்சின் ஓரம் ஈரம்
அச்சோ அச்சோ காதல் வந்தாச்சோ

பாடியவர்: கேகே
படம்: 12 B
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: வைரமுத்து

0 comments:

Post a Comment