ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன
கற்றை பார்வையில் கற்றை பார்வையில்
கண்ணால் ஜாடைகள் செய்தால் என்ன
வார்த்தை வந்தாலும் காதல் வராமல் வாழ்பவர் கோடியே
காதல் வந்தாலும் வார்த்தை வராமல் வாழ்வது கொடுமையே
ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன
வார்த்தை வந்தாலும் காதல் வராமல் வாழ்பவர் கோடியே
காதல் வந்தாலும் வார்த்தை வராமல் வாழ்வது கொடுமையே
ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன
கவிதையிலே பொய்களுக்கு கெளரவம் அதிகம் தான்
காதலிலே உயிர்களுக்கு கெளரவம் குறைவு தான்
நேருக்கு நேர் காதல் சொன்னால் நெஞ்சுக்கு நிறைவு தான்
காதலின் வீதியில் மௌனமே இரைச்சல் தான்
ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன
வார்த்தை வந்தாலும் காதல் வராமல் வாழ்பவர் கோடியே
காதல் வந்தாலும் வார்த்தை வராமல் வாழ்வது கொடுமையே
பாடியவர்: ஷான்
படம்: மோதி விளையாடு
இசை: ஹரிஹரன் - லெஸ்லி
பாடல்: கவிஞர் வைரமுத்து
0 comments:
Post a Comment