Showing posts with label தெய்வத் திருமகள். Show all posts
Showing posts with label தெய்வத் திருமகள். Show all posts

20110825

விழிகளில் ஒரு வானவில் ...




விழிகளில் ஒரு வானவில் 
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

உன்னிடம் பார்கிறேன் நான் பார்கிறேன்
என் தாய்முகம் அன்பே
உன்னிடம் தோற்கிறேன் நான் தோற்கிறேன்
என்னாகுமோ இங்கே
முதன் முதலாய் மயங்குகிறேன்
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன்னே என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா

விழிகளில் ஒரு வானவில் 
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே
நாளையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்
தேர் சென்ற பின்னாலே
வீதி என்னாகுமோ

யார் இவன் யார் இவன்
ஓர் மாயவன் மெய்யானவன் அன்பில்
யார் இவன் யார் இவன்
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ
என் தீவில் பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது
மனம் எங்கும் மணம்

விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

நான் உனக்காக பேசினேன்
யார் என்னக்காக பேசுவார்
மௌனமாய் நான் பேசினேன்
கைகளில் மை பூசினேன்
நீ வந்த கனவெங்கே
காற்றில் கை வீசினேன்
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே
உன் முன்புதானடா இப்போது நான்
பெண்ணாகிறேன் இங்கே
தயக்கங்களால் திணறுகிறேன்
நில்லென்று சொன்ன போதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி

பாடியவர்: சைந்தவி 
படம்: தெய்வத் திருமகன் 
இசை: ஜி வி பிரகாஷ் குமார்
பாடல்: நா.முத்துக்குமார்