20091217

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க...
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்
அன்றில் அடைமழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்


நீ நீ ஒரு நதியலையானாய்
நான் நான் அதில் விழும் நிலையானேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொடப் பிழைத்திடுவேனோ
மழையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்
மனதிலே இருப்பதெல்லாம்
மெளனத்திலே கலக்கும்


(அன்பே என் அன்பே)


நீ நீ ஒரு புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே
எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைந்தோம்
எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

(அன்பே என் அன்பே)


பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா
படம்: தாம்தூம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: நா.முத்துக்குமார்


0 comments:

Post a Comment