Showing posts with label Aadukalam. Show all posts
Showing posts with label Aadukalam. Show all posts

20110706

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ




யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

மீன் கொத்தியப்போல நீ கொத்துரதால
அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா
உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா
தலைகாலுப் புரியாம தரைமேல நிக்காம
தடுமாறிப் போனேனே நானே நானே 

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா
உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா
நான் தலைகாலுப் புரியாம தரைமேல நிக்காம
தடுமாறிப் போனேனே நானே நானே 

உலர் தட்ட மரமாகவே தலை சுத்திப்போகிறேன்
நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்
உனைத்தேடியே மனம் சுத்துதே
ராக்கோழியாய் தினம் கத்துதே
உயிர்நாடியில் பயிர் செய்கிறாய்
சிறுபார்வையில் எனை நெய்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி சதிகாரி எப்படி செஞ்ச என்ன
நான் சருகாகிப் போனேனே பார்த்த பின்னே
நான் தலைகாலுப் புரியாம தரைமேல நிக்காம
தடுமாறிப் போனேனே நானே நானே 
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி நெஞ்சின் நிலாவிலே தேன் அள்ளி ஊத்துற
கையில் ஏதும் இல்லாமலே உசுரையேக் கோர்க்குற
எனை ஏனடி வதம் செய்கிறாய்
எனை வாட்டிடும் உலை வைக்கிறாய்
கடவாயிலே எனை மேய்கிறாய்
கண் ஜாடையில் எனைக்கொல்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன் கொத்தியப்போல நீ கொத்துரதால
அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா
உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா
தலைகாலுப் புரியாம தரைமேல நிக்காம
தடுமாறிப் போனேனே நானே நானே 


பாடியவர்: G.V. பிரகாஷ் குமார்
படம்: ஆடுகளம்
இசை: G.V. பிரகாஷ் குமார்
பாடல் : சினேகன்

20110705

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...



ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணாலே என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ளே ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா
ஏ பொட்ட காட்டுலே ஆலங்கட்டி மழை பெய்ஞ்சு
ஆறொன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஒட்டிக்கிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

ஏ பவுடர் டப்பா தீர்ந்து போனதே
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனதே
நான் குப்பறதான் படுத்து கிடந்தேன்
என்ன குதிர மேல ஏத்திவிட்டாயே
ஒண்ணும் சொல்லாம உசிர தொட்டாயே
மனச இனிக்க வச்ச சீனி மிட்டாயே
ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணாலே என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ளே ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா

ஏ கட்ட வண்டி கட்டி வந்துதான்
அவ கண்ணழக பாத்து போங்கடா
அட கட்டு சோறு கட்டி வந்துதான்
அவ கழுத்தழக பாத்து போங்கடா
கத்தாழ பழச்சிவப்பு முத்தாத இளஞ்சிரிப்பு
வத்தாத அவ இடுப்பு நான் கிறுக்கானேன்
ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணாலே என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ளே ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா

அட ரேஷன் கார்டில் பேர ஏத்துவேன்
ஒரு நாள் குறிச்சி தட்டு மாத்துவேன்
ஏ ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மெண்ணு தின்னாலே என்ன ஒருவாட்டி
ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணாலே என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ளே ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா
அட பொட்ட காட்டுலே ஆலங்கட்டி மழை பெய்ஞ்சு
ஆறொன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஒட்டிக்கிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவ தான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

பாடியவர்: வேல்முருகன்
படம் : ஆடுகளம்
இசை : G.V. பிரகாஷ்
பாடல்: யேகாதசி

20110111

ஐயய்யோ நெஞ்சு அலையுதடி...



      ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி

உன்னப்பார்த்த அந்த நிமிஷம்
உறைஞ்சுப்போச்சு நகரவே இல்ல
திண்ணசோறும் செறிக்கவே இல்ல
புலம்புறேன் நானு
உன் வாசம் அடிக்கிறக்காத்து எங்கூட நடக்கிறது
என் சேவல் கூவுற சத்தம் உம்பேராக் கேட்கிறது
ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி

உன்னத் தொடும் அனல் காத்து
கடக்கையிலப் பூங்காத்து
கொழம்பித்தவிக்குதடி எம்மனசு

ஓ திருவிழா கடைகளைப்போல
தெணருறேன் நான் தானே
எதிரில் நீ வரும்போது
நனனன ஏன் தானோ
கண் சிமிட்டும் தீயே 
என்னை எரிச்சிப்புட்ட நீயே

ஹோ ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
ஹோ எம்மேல நிலா பொழியுதடி

மழைச்சாரல் விழும் வேளை
மண் வாசம் மணம் வீச
ஒம்மூச்சு தொடவே நான் மிதந்தேன்

கோடையில அடிக்கிற மழையா
நீ என்னை நனைச்சாயே
நீருக்குள்ள அணைக்கிற சுகத்தை
பார்வையிலக் கொடுத்தாயே

பாதகத்தி என்னை 
ஒருபார்வையால கொன்ன
ஊரோடு வாழுற போதும்
யாரோடும் சேரலதான்

ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்னப்பார்த்த அந்த நிமிஷம்
உரைஞ்சுப்போச்சே நகரவே இல்ல
திண்ணசோறும் செறிக்கவே இல்ல
புலம்புறேன் நானு

உன் வாசம் அடிக்கிறக்காத்து எங்கூட நடக்கிறது
என் சேவல் கூவுற சத்தம் உம்பேராக் கேட்கிறது
ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி

பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், SPB சரண், பிரஷாந்தினி
படம்: ஆடுகளம்
இசை: GV பிரகாஷ் குமார்