20091202

எனக்கென பிறந்தவ...




எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
தலுக்குல குலுக்குல
இவளுக்கு ஈடுஇணை எவதான்
ஊரு எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா

யம்மாடியோஓஓஓஒ..
ஓஒ ஓஓ ஓஓ ஓஓ

உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
எனைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

மாஞ்சிட்டு மேடை போட்டு
மைக்செட்டு மாட்டினா
மாமாவை வளைச்சு போட
புதுதிட்டம் தீட்டினா

ஆளான காலம் தொட்டு
உனக்காக ஏங்கினாள்
அன்னாடம் தூக்கம் கெட்டு
அணல் மூச்சு வாங்கினாள்

பச்சக்கிளி தன்னந்தனியே
இன்னும் என்னாச்சு

உச்சம் தலையில் வெச்ச மலரின்
வெட்கம் உண்டாச்சு

மயங்காதே மாலை மாத்த
மாமன் வந்தாச்சு

உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
எனைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

நீ சூட்டும் பூவுக்காக
நெடுங்கூந்தல் வாடுது
நீ வைத்த பொட்டுக்காக
நடுநெற்றி வாடுது

ஆத்தாடி உன்னைத்தானே
கண்ணாடி தேடுது
காவேரி எங்கே போகும்
கடல்வந்து கூடுது

அந்திப்பொழுதில் தென்னங்கிளையில்
தென்றல் கூத்தாட

மையல் பூசும் மஞ்சக்குருவி
கையை கோர்த்தாட

அடங்காது ஆசைகூட
நானும் போராட

உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

ஊரு எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா

யம்மாடியோஓஓஓஒ..
ஆஆ..ஆஆ..ஆஆ.

எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
தலுக்குல குலுக்குல
இவளுக்கு இணைதான் எவதான்




பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
படம்: கிழக்கு கரை
இசை: தேவா

0 comments:

Post a Comment