20091213

கண்ணுக்குள் ஏதோ...கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடிச் சத்தம் ஒன்று கேட்கிறதே
உன் உயிர்வந்து எந்தன் உயிர்தொட்டது
என் உலகமே உன்னால் மாறிவிட்டது

கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே காதல் வந்து கெடுத்தபின் கவிதைகள் படிக்கிறேன்

தோழிகளைத் தவிர்க்கிறேன் உன்னைத்தேடி வருகிறேன்

தாய் தந்தை இருந்தும் ஏன் தனிமையில் தவிக்கிறேன்
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்

எந்தன் வீட்டை சொந்தமென்று நேற்றுவரை நினைத்தவள்
உன்வீட்டில் குடிவர நினைக்கிறேன்

உன்னைக் காதலித்த கணமே உனக்குள் வந்தேன்
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே
கனவிலே நீயும் வந்தால் புகைப்படம் எடுக்கிறேன்

கனவுகள் இங்கு இல்லை கண்விழித்து நினைக்கிறேன்

பெண்ணே நானோ உன்னை என்றும் மறப்பது இல்லையடி
மறந்தால் தானே நினைத்திட

அன்பே நானோ இறக்கையில் உந்தன் சுவாசம் தீண்டட்டும்
உடனே நானும் பிறந்திட

உண்மைக் காதல் சாவது இல்லையடி
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே

நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடிச் சத்தம் ஒன்று கேட்கிறதே
உன் உயிர்வந்து எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால் மாறிவிட்டது
கண்ணே சொல் இதுதான் காதல் என்பதாபாடியவர்கள் : விஜய் யேசுதாஸ், ரீட்டா
இசை: D. இமான்.
படம் : திருவிளையாடல் ஆரம்பம்


0 comments:

Post a Comment