Showing posts with label vijay songs. Show all posts
Showing posts with label vijay songs. Show all posts

20101217

விண்ணைக் காப்பான் ஒருவன்...



விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்

எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமி
நீ சாதி இல்லை என்பவனே நல்லச் சாமி
அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி-அட
ஆட்டமுன்னா என்னவென்னு ஆடிக்காமி
விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்

ஏறு முன்னேறு ஏறு 
பேரு வரும் பேரு பேரு
ஊரு அட யாதும் இங்க நம்ம ஊரு
ஓடு தெம்போடு போடு 
கூடு அன்போடு கூடு
வாழ்வில் அட வந்து போகும் பள்ளம்மேடு

எடுடா மேளத்த தாளத்த வேகத்த இனிமேதான் வித்த
மொத்தக் கூட்டத்த கூட்டித்தான் கொண்டாடு..

நம்ம சொந்தத்த பந்தத்த நெஞ்சத்த திருநாளில் கண்டு
ஒன்னாஉறவாடு அன்போட விளையாடு

ஆலாலகண்டனே ஆட்டத்துக்கு மன்னனே
ஆனந்தத் தாண்டவம் ஆடுவோமே
விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்

விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்

யாரு இள நெஞ்சில் யாரு 
கூறு அவன் காதில் கூறு
ராதை மனம் சொன்னதெல்லாம் கண்ணன் பேரு

ஊரு திருநாளில் ஊரு 
ஓடும் திருவாரூர் தேரு
ஆட்ட பலி கேட்டதில்ல ஐயனாரு

அன்பின் வழியொன்று மொழியொன்று 
என்றானால் உலகெல்லாம் ஒன்று
வெற்றிக் கொடிகட்டு பறக்கட்டும் முன்னாலே
அச்சம் விலகட்டும் விலகட்டும் மறையட்டும் 
அதைத் தூக்கிப் போடு
வீரம் விளையட்டும் விளையட்டும் மண்மேலே

நான் பாட்டுப் பாடுனா நாடாடும் ஆடும்ன்னா
நல்லசேதி யார்சொன்னாலும் கேட்டுப் போன்னா
விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்
எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமி
நீ சாதி இல்லை என்பவனே நல்லச் சாமி
அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி-அட
ஆட்டமுன்னா என்னவென்னு ஆடிக்காமி


பாடியவர்கள்: திப்பு, ஸ்வேதா
இசை: வித்யாசகர்
படம்: காவலன்
பாடல்: பா விஜய்

20101216

Step Step Step it up...



one two three...
Step Step Step it up
இளமை அழைக்குது Step it up
இதயம் பறக்குது Step it up
Step it up

Step Step Step it up
உன்னுள் மின்னல் light it up
உச்சம் வரைக்கும் keep it up
Step it up

உற்றுப் பார் உலகம் எல்லாம் அழகின் நாட்டியம்
உயிருக்குள் அருகில் இன்பத்தீயை மூட்டிடும்
உன்னை நீ மறந்தே ஆடு மோட்சம் சாத்தியம்

one two three four
யம்மம்மோ யம்மம்மோ
five six seven eight
யம்மம்மோ யம்மம்மோ

one two three four
யம்மம்மோ யம்மம்மோ
five six seven eight
யம்மம்மோ யம்மம்மோ

Step Step Step it up
இளமை அழைக்குது Step it up
இதயம் பறக்குது Step it up
Step it up


கால் சட்ட மேல் சட்ட 
லூசாகப் போட்டுட்ட
நட்பாக யாரோடும் 
சேர மறுத்திட்ட
இப்போது விண்முட்ட 
புதுசாக எழுந்திட்ட
தோனுது கைதட்ட 
அடடா உசந்திட்ட

ஆற்றில் ஆடும் மீனடி 
காட்டில் துள்ளும் மானடி
எங்கும் எதிலும் நானடி பாரடி

புது வேஷம் 
புது வேகம்
புதிதான ஆளுதான்

one two three four
யம்மம்மோ யம்மம்மோ
five six seven eight
யம்மம்மோ யம்மம்மோ

one two three four
யம்மம்மோ யம்மம்மோ
five six seven eight
யம்மம்மோ யம்மம்மோ

Step Step Step it up
இளமை அழைக்குது Step it up
இதயம் பறக்குது Step it up
Step it up

பாக்கத்தான் சிறுபுள்ள 
கலக்குற பயபுள்ள
இளம்பெண்கள் நினைப்புல 
நீதான் மாப்பிள்ள

ஏமாந்த ஆளில்ல 
நான் முன்னப் போலில்ல
பாரேண்டியென் ஆட்டம் 
யாரும் இணையில்ல

டுன் டுன் டுன் ஒலியுடன் 
அதிரும் கால்கள் உன்னுடன்
ஆடு கொஞ்சம் என்னுடன் என்னுடன்

கைகோர்த்து… 
மெய் சேர்த்து 
உயிர் பூத்து ஆடலாம்…

one two three four
யம்மம்மோ யம்மம்மோ
five six seven eight
யம்மம்மோ யம்மம்மோ
one two three four
யம்மம்மோ யம்மம்மோ
five six seven eight
யம்மம்மோ யம்மம்மோ


பாடியவர்கள்: பென்னி, மேக்ஹா
இசை: வித்யாசாகர்
படம்: காவலன்
பாடல்: விவேகா

20101215

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது ...




ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
    பூவே ஓடாதே

பெ : காதல்தேனை சாப்பிடும் போது 
     பேசக் கூடாதே

ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
    பூவே ஓடாதே

பெ : காதல்தேனை சாப்பிடும் போது
     பேசக் கூடாதே

ஆ : யானைத் தந்தத்தின் சிலை நீயே 
    ஏறும் தங்கத்தின் விலை நீயே

பெ : காதல் வீசிய வலை நீயே
     என்னைக் கட்டி இழுத்தாயே

ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
    பூவே ஓடாதே

பெ : காதல்தேனை சாப்பிடும் போது 
     பேசக் கூடாதே

பெ : எதைத்த தருவது தானென்று 
     எதைப் பெறுவது தானென்று
     குறுக்கும் நெடுக்கும் குழந்தை போல 
     இதயம் குதித்தோட

ஆ : தலையசைக்குது உன் கண்கள்
    தவிதவிக்குது என்நெஞ்சம்
    ஒரு தீ போல ஒருத்தி வந்து 
    உயிரைப் பந்தாட

பெ : ஞாபகம் உன் ஞாபகம்
     அது முடியாத முதலாகும்

ஆ : பூமுகம் உன் பூமுகம்
    அது முடியாத முதல் பாகம்

பெ : பெண்கவிதை இவள்தானே 
     உன் இதழால் படிப்பாயோ
     கண்ணிமையால் எனை மூடி 
     காதல் திறப்பாயோ

ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
     பூவே ஓடாதே

பெ : ஓய் ஓய் காதல்தேனை சாப்பிடும் போது 
     பேசக் கூடாதே

ஆ : அலைவரிசையில் நீ சிரிக்க 
     தொலைத்தொடர்பினில் நான் இருக்க
     உதடும் உதடும் பேசும் போது 
     உலகை மறந்தேனே

பெ : உனதருகினில் நானிருக்க 
     உயிர்க் கொழுந்தினில் பூ முளைக்க
     இரண்டாம் முறையாய் இதயம் துடிக்கப் 
     புதிதாய்ப் பிறந்தேனே



ஆ : மாலையில் பொன் மாலையில் 
    உன் மடி மீது விழுவேனே

பெ : மார்பினில் உன் மார்பினில் 
     நான் மருதாணி மழை தானே

ஆ : வெண்ணிலவோ நெடுந்தூரம் 
    பெண்ணிலவோ தொடுந்தூரம்
    உன்மழையில் நனைந்தாலே 
    காய்ச்சல் பறந்தோடும்

ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
    பூவே ஓடாதே

பெ : காதல்தேனை சாப்பிடும் போது 
     பேசக் கூடாதே

ஆ : யானைத் தந்தத்தின் சிலை நீயே
    ஏறும் தங்கத்தின் விலை நீயே

பெ : காதல் வீசிய வலை நீயே
     என்னைக் கட்டி இழுத்தாயே


பாடியவர்கள்: கே,கே, ரீட்டா
இசை: வித்யாசாகர்
படம்: காவலன்
பாடல்: கபிலன்

20101214

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்...


சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்
அவள் நேரத்தில் வருவாளா காக்கத்தான் விடுவாளா
பார்த்தாலே முறைப்பாளா பால் போலச் சிரிப்பாளா
கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா
கொஞ்சிக் கொஞ்சிக் காதல் செய்து கொல்வாளா

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்


கட்டுத் தறியின்றி எனதுள்ளம் 
உனை எண்ணிக் கொண்டு
அங்கும் இங்கும் கும்மி கொட்டுதே
சொல்ல மொழி இன்றி தமிழ்சொற்கள் 
எனை விட்டு விட்டு
அந்தரத்தில் அம்மி கொத்துதே

காதல் தெருவிலே எனதாசை அலையுதே
நீங்கா நினைவிலே நிழல் கூட வெளுக்குதே
குரலாலே என்னில் குடியேறிக்கொண்ட
கொலைகாரி உந்தன் ஞாபகங்கள் என்னைக் குத்துதே
சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

கங்கை நதி வெள்ளம் 
சிறு சங்குக்குள்ளே சிக்கிக் கொண்டு
அக்கரைக்கு செல்ல எண்ணுதே
சின்னம் சிறு பிள்ளை 
ஒரு சொப்பனத்தை வைத்துக் கொண்டு
கண்ணுறக்கம் கெட்டு நிக்குதே

நீ என் எதிரிலே 
வரவேண்டும் விரைவிலே
நேரில் வரும் வரை 
முகம் காட்டு கனவிலே

மெதுவாகச் செல்லும் கடிகாரமுள்ளும்
உனைக் காணச் சொல்லி 
ஹையையையோ நச்சரிக்குதே 
சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்
அவள் நேரத்தில் வருவாளா காக்கத்தான் விடுவாளா
பார்த்தாலே முறைப்பாளா பால் போலச் சிரிப்பாளா
கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா
கொஞ்சிக் கொஞ்சிக் காதல் செய்து கொல்வாளா

பாடியவர்: கார்த்திக்
இசை: வித்யாசாகர்
படம்: காவலன்.
பாடல்: யுகபாரதி

20101213

யாரது யாரது யாரது யாரது ...



யாரது யாரது யாரது யாரது 
யாரது யாரது யாரது யாரது 
சொல்லாமல் என் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் என்கண்ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது 

நெருங்காமல் நெருங்கி வந்தது 
விலகாமல் விலகி நிற்பது
விடையாகக் கேள்வி தந்தது 
தெளிவாகக் குழம்ப வைத்தது

யாரது யாரது யாரது யாரது 
யாரது யாரது யாரது யாரது

என்னிலொரு சடுகுடுசடுகுடு 
காலை மாலை நடக்கிறதே

கண்ணில் தினம் கதகளி கதகளி 
தூங்கும் போது தொடர்கிறதே

என்னிலொரு சடுகுடுசடுகுடு 
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி 
தூங்கும் போது தொடர்கிறதே
இரவிலும் அவள் பகலிலும் அவள் 
மனதினைத் தருவது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள் 
நிழலெனத் தொடர்வது புரிகிறதே

இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே

யாரது யாரது யாரது யாரது 
யாரது யாரது யாரது யாரது

உச்சந்தலை நடுவினில் அவளொரு 
வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரினில்
இம்சைராச்சியம்தொடங்குகிறாள்
அவளிவளென எவள் எவளென 
மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட 
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்

இருந்தாலும் இல்லாமல் அவள் கலகம் செய்கிறாள்

யாரது யாரது யாரது யாரது 
யாரது யாரது யாரது யாரது
சொல்லாமல் என் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் என் கண்ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது 
விலகாமல் விலகி நிற்பது
விடையாகக் கேள்வி தந்தது 
தெளிவாகக் குழம்ப வைத்தது


பாடியவர்கள்: கார்த்திக், சுசித்ரா
இசை: வித்யாசாகர்
படம்: காவலன்
பாடல்: யுக பாரதி