சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யார் நாந்தானே அடி அடி நாந்தானே
கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நாந்தானே ஆ..
(சந்திரனை..)
பூக்களை செடிக்கொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்
பூக்களை செடிக்கொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்
பூவை உன்னைப் பார்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன்
தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்
தலைவனைப் பிரிகையிலே தலையணைத் துணையறிந்தேன்
தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று மாறிவிட்டேன்
புயலுக்கு பிறந்தவள் நான் தென்றலென்று மாறிவிட்டேன்
கருங்கல்லைப் போன்றவன் கற்பூரம் ஆடிவிட்டேன்
(சந்திரனை..)
தாமரை மலர்கொண்டு செதுக்கிய ஓவியமே
என்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்
மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை
காதலை சுமக்கையிலே காதலரும் பாரமில்லை
சொர்க்கத்துக்கு வந்துவிட்டோமே தர்க்கத்துக்கு நேரமில்லை
முத்தங்கள் நீ வழங்கு இதழுக்கு நேரமில்லை
(சந்திரனை..)
பாடியவர்கள்: ஹரிஹரன், சுஜாதா
படம்: ரட்சகன்
இசை: AR ரஹ்மான்
பாடல்: வைரமுத்து
0 comments:
Post a Comment