20091202

விழிகளில் விழிகளில் ...


I just need your loveவிழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக் கொண்டாய்

யாரென்று நான் யாரென்று அடி மறந்தே போனதே
உன் பேரைக் கூடத் தெரியாமல் மனம் உன்னைச் சுற்றுதே
ஒருநாள் வரைதான் என நினைத்தேன்
பலநாள் தொடரும் வலிக் கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்


I just need your love

காதல் என் காதில் சொல்வாய்


Just just give me love

(விழிகளில் விழிகளில்)

சாலையில் நீ போகையிலே மரமெல்லாம் கூடி முணுமுணுக்கும்
காலையில் உனைப் பார்ப்பதற்கு சூரியன் கிழக்கில் தவமிருக்கும்
யாரடி நீ யாரடி அதிருதே என் ஆறடி

ஒரு கார்பன் தாளென கண்ணை வைத்து காதலை எழுதி விட்டாய்
அந்த காதலை நானும் வாசிக்குமுன்னே எங்கே ஓடுகிறாய்
போகாதே போகாதே என் சுடிதார் சொர்க்கமே
நீ போனாலே நீ போனாலே என் வாழ்நாள் சொற்பமே

(விழிகளில் விழிகளில்)

பூவிலே செய்த சிலையல்லவா பூமியே உனக்கு விலையல்லவா
தேவதை உந்தன் அருகினிலே வாழ்வதே எனக்கு வரமல்லவா
மேகமாய் அங்கு நீயடி தாகமாய் இங்கு நானடி

உன் பார்வை தூறலில் விழுந்தேன் அதனால் காதலும் துளிர்த்ததடி
அந்த காதலை நானும் மறு நொடி பார்த்தேன் மரமாய் அசையுதடி
இன்றோடு அடி இன்றோடு என் கவலை முடிந்ததே
ஒரு பெண்கோழி நீ கூவித்தான் என் பொழுதும் விடிந்ததே


பாடியவர்: ஹரிஸ் ராகவேந்திரா
படம்: திருவிளையாடல் ஆரம்பம்
இசை: D.இமான்

0 comments:

Post a Comment