Showing posts with label பச்சைக்கிளி முத்துச்சரம். Show all posts
Showing posts with label பச்சைக்கிளி முத்துச்சரம். Show all posts

20100411

உனக்குள் நானே ...



மின்னும் பனி சாறு
உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து
பெண் தைத்து கொண்டாளே
வெண்ணிலா தூவி
தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம்
உன் பேச்சில் கண்டாளே
பொன் மான் இவளா
உன் வானவில்லா
பொன் மான் இவளா
உன் வானவில்ல
***
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்ல சொல்லும் என்னை வாட்டும்
நாணமும் தேனல்லவா
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா

ஏனோ நாம் பொய் வார்த்தை தான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பை தந்தாய்
மனதில் கனத்தை தந்தாய்
ஒரு முறை உன்னை
எனக்கென்று ஸ்வாசிக்கவா
ஒரு முறை உன்னை
எனக்கென்று ஸ்வாசிக்கவா
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா

தீப்போல் தேன்போல் சலனமே தான்
மதி என் நிம்மதி சிதையாதா
நிழலை விட்டு சென்றாயே
நினைவை விட்டு சென்றாயா
இனி ஒரு பிறவி
உன்னோடு வாழ்ந்திடவா
அது வரை என்னை
காற்றோடு சேர்த்திடவா
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்ல சொல்லும் என்னை வாட்டும்
நாணமும் தேனல்லவா

பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்