Showing posts with label கிரீடம். Show all posts
Showing posts with label கிரீடம். Show all posts

20091201

அக்கம் பக்கம் யாருமில்லா ...






அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
(
அக்கம் பக்கம்..)

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலைகோதி


காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச் சூட்டில் முகம் புதைப்பேன்


வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
(
அக்கம் பக்கம்..)

நீயும் நானும் சேரும்முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல் நிஜம்
இன்று விண்ணில் மிதக்கிறதே


உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துக்கொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதைத் தெரிந்துக்கொண்டேன்


வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
(
அக்கம் பக்கம்..)






பாடியவர்சாதனா சர்கம்
படம்: கிரீடம்
இசை: GV பிரகாஷ்