Showing posts with label Jodi. Show all posts
Showing posts with label Jodi. Show all posts

20100106

ஒரு பொய்யாவது சொல் ...




ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
(ஒரு பொய்யாவது..)

பூக்களில் உன்னால் சத்தம்
அடி மெளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்

பெண்மையும் மென்மையும் பக்கம் பக்கம்தான்
ரொம்பப் பக்கம் பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்
(ஒரு பொய்யாவது...)

இரவினைத் திரட்டி..யி..யி.......ஓ.....
இரவினைத் திரட்டி கண்மணி உன் கூந்தல் செய்தானோ
கண்மணி உன் கூந்தல் செய்தானோ
நிலவின் ஒளி எடுத்து கண்கள் செய்தானோ...
விண்மீன், விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டு
தங்கம், தங்கம் பூசி தோல் செய்தானோ

ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
(ஒரு பொய்யாவது..)

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னதும் நீதானே
ஒ.. காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தவள் யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே

ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
காதல் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
(ஒரு பொய்யாவது..)


பாடியவர்: ஹரிஹரன்
படம்: ஜோடி
இசை: AR ரஹ்மான்