Showing posts with label ஜெமினி. Show all posts
Showing posts with label ஜெமினி. Show all posts

20100106

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்...



பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு எனை உலையில் ஏற்றினாய்

நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்

பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா

(பெண்ணொருத்தி.....)

கண்களிலே நோட்டம் பார்த்தே
கன்னத்தில் சமணம் பார்த்து
பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்குதே

பற்களிலும் கருணை பார்த்தேன்
பாதங்களில் தெய்வம் பார்த்தேன்
புன்னகையோ உயிரை தின்ன பார்க்குதே

புயலென்று நினைத்தேன் என்னை
புயல் கட்டும் கயிறாய் வந்தாள்
மலை என்று நினைத்தேன் என்னை
மல்லிகையால் மலையை சாய்த்தாள்

நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா

(பெண்ணொருத்தி.....)

பகலெல்லாம் கருப்பாய் போக
இரவெல்லாம் வெள்ளை ஆக
என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ

அய்யய்யோ உலக உருண்டை
அடி வயற்றில் சுற்றுவதென்ன
அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ

எரிமலையின் கொண்டை மேலே
ரோஜாவை நட்டவள் யாரோ
காதல் எனும் கணவாய் வழியே
என் தேசம் புகுந்தவள் யாரோ

சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா

(பெண்ணொருத்தி.....)

பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா


பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
படம்: ஜெமினி
இசை: பரத்வாஜ்