20121115

அண்டார்டிக்கா வெண் பனியிலே...


உனைப் போலே ஒரு பெண்ணை
காண்பேனா என்றே வாழ்ந்தேன்
நீ கிடைத்தால்,
என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்


அண்டார்டிக்கா
வெண் பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்?

நீ பெங்குவினா?
பெண் டால்ஃபினா?
ஏன் குழம்புது கொஞ்சம்?

ஹே நிஷா….. நிஷா நிஷா
ஓ...நிஷா…. நிஷா நிஷா
அடி பெண்ணே என்
மனது எங்கே
ரேடார் விளக்குமா?
அடி என் காதல்
ஆழம் என்ன?
சோனா அளக்குமா?

அடி பெண்ணே என்
மனது எங்கே
ரேடார் விளக்குமா?
அடி என் காதல்
ஆழம் என்ன?
சோனா அளக்குமா?
ஹே நிஷா….. நிஷா நிஷா
ஓ...நிஷா…. நிஷா நிஷா

அழகளந்திடும் கருவிகள்
செயலிழந்திடும் அவளிடம்
அணியிலக்கணம் அசைவதை பார்த்தேன்!
அவள் புருவத்துக் குவியலில்
மலைச் சரிவுகள் தோற்பதால்
விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்!
அவள் மேலே வெயில் வீழ்ந்தால்
நிலவொளியாய் மாறிப் போகும்
அவள் அசைந்தால்,
அந்த அசைவிலும் இசை பிறக்கும்!

அண்டார்டிக்கா
வெண் பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்?

நீ பெங்குவினா?
பெண் டால்ஃபினா?
ஏன் குழம்புது கொஞ்சம்?


தடதடவென ராணுவம்
புகுந்திடும் ஒரு சாலையாய்
அதிர்வுடன் நுழைந்தாயடி, என்னில்!
இருவிழிகளெனும் குழலிலே
படபடவென வெடிக்கிறாய்
இருதயம் துளைத்தாயடி, கண்ணில்!
உனைப் போலே ஒரு பெண்ணை
காண்பேனா என்றே வாழ்ந்தேன்
நீ கிடைத்தால்,
என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்

அண்டார்டிக்கா
வெண் பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்?

நீ பெங்குவினா?
பெண் டால்ஃபினா?
ஏன் குழம்புது கொஞ்சம்?

ஹே நிஷா….. நிஷா நிஷா
ஓ... நிஷா…. நிஷா நிஷா
அடி பெண்ணே என்

மனது எங்கே
ரேடார் விளக்குமா?
அடி என் காதல்
ஆழம் என்ன?
சோனார் அளக்குமா?

அடி பெண்ணே என்
மனது எங்கே
ரேடார் விளக்குமா?
அடி என் காதல்
ஆழம் என்ன?
சோனார் அளக்குமா?

ஓ...ஓ...ஓ...ஓ...

பாடியவர்கள்: விஜய்பிரகாஷ்,க்ரிஷ்,தேவன்,ராஜீவ்
வரிகள்: மதன் கார்க்கி
இசை: ஹாரிஸ்ஜெயராஜ்
படம்: துப்பாக்கி

20111226

ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே...ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே

அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்கு
அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்கு

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ -
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே - லவ்
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ 
ஒரு காதல் உந்தன் மேலே

அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்கு

20111225

இருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா...
இருக்காண்ணா
இடுப்பிருக்காண்ணா
இல்லையாணா இலியானா

உன் இடைதானா - இன்பக்
கடை தானா மெல் இடைதாண்டி
குடைதானா

ஹார்ட்டிலே பேட்டரி...
ஹார்ட்டிலே பேட்டரி
சார்ஜுதான் All is well
தோல்வியா டென்ஷனா
சொல்லிடு All is well

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்...
என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்
அவன் Trenda எல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான் என
எண்ணி எண்ணி ஏங்க வச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தெச்சான்
நம் கண்ணில் நீர பொங்கவச்சான்

எந்தன் கண்முன்னே கண்முன்னே...

எந்தன் கண்முன்னே கண்முன்னே
காணாமல் போனேனே
யாரும் பார்க்காத விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே