Showing posts with label YUVAN YUVATHI. Show all posts
Showing posts with label YUVAN YUVATHI. Show all posts

20110829

மயக்க ஊசி உந்தன் பார்வையாச்சு ...




மயக்க ஊசி உந்தன் பார்வையாச்சு 
அது தாக்கி தாக்கி மூர்ச்சையானேனே 
மருகி மருகி தினம் உருகி உருகி 
உன்னைத் தாங்கி தாங்கி மோட்சம் போனேனே 

நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே 
என்ன ஆச்சு ஏதும் எனக்குத் தெரியாதே 

மயக்க ஊசி உந்தன் பார்வையாச்சு 
அது தாக்கி தாக்கி மூர்ச்சையானேனே 

உலகில் உள்ள அழகை எல்லாம் உன்னில் கண்டேனே 
அணுமின் நிலையம் ஒன்றை உந்தன் கண்ணில் கண்டேனே 
ஓ... ஓ... எதுவும் புரியாமல் என்னை அறியாமல் 
உன்னில் காதல் கொண்டேனே ஏ...ஏ... ஓ ஹோ

சிலையை மீட்டும் உளியைப் போலே என்னைத் தொட்டாயே 
கலயம் செய்யும் விரலால் என்னை ஏதோ செய்தாயே 

உடையை களையாமல் வழியை உணராமல் 
சுகமாகக் கொன்றாயே 

உன்னைக் கண்ட மறு நொடியே 
இருதயம் வலப் புறம் மாறிடுதே 

உன் கை தீண்டும் ஒரு நொடியில் 
நரம்புகள் எனக்குள்ளே வெடிக்கின்றதே

மயக்க ஊசி உந்தன் பார்வையாச்சு
அது தாக்கி தாக்கி மூர்ச்சையானேனே 

தனியே நாமும் காணும் நேரம் பூமி நிற்கட்டும்
பிரியா விடையை சொன்ன பின்னே மீண்டும் சுற்றட்டும்
சிறகை விரிக்காமல் உயரே பறக்காமல் 
விழி விண்ணைத் தாண்டட்டும் 

உந்தன் முன்னே தூங்கும் தோட்டம் தோற்றுப் போகட்டும் 
நீயும் சூட பூக்கள் எல்லாம் கெஞ்சிக் கேட்கட்டும் 
கடலும் நீயாக புயலும் நானாக
உன்னில் மையம் கொள்ளட்டும் 

காதல் என்ற வார்த்தையிலே 
ஆயிரம் கவிதைகள் தெரிகிறதே 

இமைகள் தாக்கி இதயங்களே
பொடிப் பொடிப் பொடியாய் உதிர்கிறதே 

மயக்க ஊசி உந்தன் பார்வையாச்சு 
அது தாக்கி தாக்கி மூர்ச்சையானேனே 
மருகி மருகி தினம் உருகி உருகி 
உன்னைத் தாங்கித் தாங்கி மோட்சம் போனேனே 
நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே 
என்ன ஆச்சு ஏதும் எனக்குத் தெரியாதே


பாடியவர்கள்:விஜய் பிரகாஷ், மதுமிதா
படம்: யுவன் யுவதி
இசை:விஜய் ஆண்டனி
பாடல்:கலைக்குமார்

20110822

உன்னை மறக்காமல் இருப்பதால்...




உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்
உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்

ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்
ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்
ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்
ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்

உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்

நீ கண்ணில் விழுந்த நாளில்
என் அமைதி கலைந்ததடி
மனம் கல்லை எறிந்த குளமாய்
அதில் அலை வந்து எழுந்ததடி
என் கண்களில் உயிர் வந்து கசிகிறதே
இது காதல் கொடுத்த வலி
இங்கு கடலினை ஒரு துளி பிரிகிறதே
நீ என்னைப் பிரிந்த நொடி

ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்
ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்
ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்
ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்

உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்

இந்த உடலைப் பிரிந்து வெளியே
எந்தன் உயிர் தான் அலையுதடி
நான் மட்டும் இங்கே தனியே
என் இதயம் வலிக்குதடி
உடலுக்கு ஒரு முறை மரணம் வரும்
என் மனம் தினம் சாகுதடி
நரகத்தை போல் என் வாழ்க்கை
உன் ஞாபகம் கொல்லுதடி

ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்
ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்
ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்
ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்


பாடியவர்: விஜய் ஆண்டனி
படம்: யுவன் யுவதி
இசை: விஜய் ஆண்டனி
பாடல்:அண்ணாமலை