Showing posts with label Dhina. Show all posts
Showing posts with label Dhina. Show all posts

20100106

சொல்லாமல் தொட்டுச் செல்லும் ...




சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னைக் கொல்ல கொல்ல
இந்தக் காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

[சொல்லாமல் தொட்டுச்...]

ஓ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
ஓ நெருப்பை விழுங்கிவிட்டேன்
அமிலம் அருந்திவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூப் பறித்தவள் நீதானே

[சொல்லாமல் தொட்டுச்...]

ஓ பெண்களின் உள்ளம் படுகுழியென்பேன்
விழுந்து எழுந்தவன் யார்
ஆழம் அளந்தவன் யார்
ஓ கரையைக் கடந்தவன் யார்
காதல் இருக்கும் பயத்தினில்தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன்தான் அலைவான் வீதியிலே

[சொல்லாமல் தொட்டுச் ...]

பாடியவர்: ஹரிஹரன்
படம்: தினா
இசை: யுவன் ஷங்கர் ராஜா