Showing posts with label திருவிளையாடல் ஆரம்பம். Show all posts
Showing posts with label திருவிளையாடல் ஆரம்பம். Show all posts

20091213

கண்ணுக்குள் ஏதோ...



கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடிச் சத்தம் ஒன்று கேட்கிறதே
உன் உயிர்வந்து எந்தன் உயிர்தொட்டது
என் உலகமே உன்னால் மாறிவிட்டது

கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே



 காதல் வந்து கெடுத்தபின் கவிதைகள் படிக்கிறேன்

தோழிகளைத் தவிர்க்கிறேன் உன்னைத்தேடி வருகிறேன்

தாய் தந்தை இருந்தும் ஏன் தனிமையில் தவிக்கிறேன்
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்

எந்தன் வீட்டை சொந்தமென்று நேற்றுவரை நினைத்தவள்
உன்வீட்டில் குடிவர நினைக்கிறேன்

உன்னைக் காதலித்த கணமே உனக்குள் வந்தேன்
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே




கனவிலே நீயும் வந்தால் புகைப்படம் எடுக்கிறேன்

கனவுகள் இங்கு இல்லை கண்விழித்து நினைக்கிறேன்

பெண்ணே நானோ உன்னை என்றும் மறப்பது இல்லையடி
மறந்தால் தானே நினைத்திட

அன்பே நானோ இறக்கையில் உந்தன் சுவாசம் தீண்டட்டும்
உடனே நானும் பிறந்திட

உண்மைக் காதல் சாவது இல்லையடி
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே

நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடிச் சத்தம் ஒன்று கேட்கிறதே
உன் உயிர்வந்து எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால் மாறிவிட்டது
கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா



பாடியவர்கள் : விஜய் யேசுதாஸ், ரீட்டா
இசை: D. இமான்.
படம் : திருவிளையாடல் ஆரம்பம்


20091202

தெரியாம பார்த்துப்புட்டேன் ...




தெரியாம பார்த்துப்புட்டேன் ஒன்ன
தெரிஞ்சேதான் மாட்டிக்கிட்டேன்
ஓ..
(தெரியாம..)
என்ன நடக்க போகுதோ
எங்கு முடிய போகுதோ
தொல்லையா ஆச்சுடி
தூக்கமே போச்சுடி
(தெரியாம..)

ஹிட்லர் போல உங்க அண்ணன்
இம்சை பண்ணுரானே என்னை

ரொம்ப பாசம்தான் என் மேலத்தான்
அவன் உயிரே நான் தான் தெரியுமா?
அத சொன்னா உனக்கு புரியுமா?

சொல்லு சொல்லு என் செல்லம் செல்லம்
நீ சொல்லாக்காட்டி நான் டூ கா செல்லம்

கண்ணில் சிறு தூசு பட்டால்
காத்த கூட நிறுத்தி வெப்பான்
காலில் ஒரு முள்ளு தெச்சா
காட்ட கொளுத்துவான்
ஹையோ ஹையோ
(தெரியாம..)

காதல் என்பது ஒருகோட்டை
அந்த கதவு தெறந்துட்டா வேட்ட
உள்ள போவோமா வெல்லம் கசக்குமா?

நான் இரும்புல செஞ்ச எறும்புடி
இனி விடியிற வரைக்கும் குறும்புடி

வேணாம் வேணாம் என் செல்லம் செல்லம்
அண்ணன் பார்த்தா உன்னை கொல்லும் கொல்லும்

உன் அண்ணை என்ன பிஸ்தா பருப்பா?
காதலுன்னா ஏண்டி வெறுப்பா?
என் மேல தான் கைய வச்சா
சங்கே அறுப்பேன்டி
(தெரியாம..)




பாடியவர்கள்: சுஜாதா, ரஞ்சித்
படம்: திருவிளையாடல் ஆரம்பம்
இசை: D இமான்


விழிகளில் விழிகளில் ...






I just need your love



விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக் கொண்டாய்

யாரென்று நான் யாரென்று அடி மறந்தே போனதே
உன் பேரைக் கூடத் தெரியாமல் மனம் உன்னைச் சுற்றுதே
ஒருநாள் வரைதான் என நினைத்தேன்
பலநாள் தொடரும் வலிக் கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்


I just need your love

காதல் என் காதில் சொல்வாய்


Just just give me love

(விழிகளில் விழிகளில்)

சாலையில் நீ போகையிலே மரமெல்லாம் கூடி முணுமுணுக்கும்
காலையில் உனைப் பார்ப்பதற்கு சூரியன் கிழக்கில் தவமிருக்கும்
யாரடி நீ யாரடி அதிருதே என் ஆறடி

ஒரு கார்பன் தாளென கண்ணை வைத்து காதலை எழுதி விட்டாய்
அந்த காதலை நானும் வாசிக்குமுன்னே எங்கே ஓடுகிறாய்
போகாதே போகாதே என் சுடிதார் சொர்க்கமே
நீ போனாலே நீ போனாலே என் வாழ்நாள் சொற்பமே

(விழிகளில் விழிகளில்)

பூவிலே செய்த சிலையல்லவா பூமியே உனக்கு விலையல்லவா
தேவதை உந்தன் அருகினிலே வாழ்வதே எனக்கு வரமல்லவா
மேகமாய் அங்கு நீயடி தாகமாய் இங்கு நானடி

உன் பார்வை தூறலில் விழுந்தேன் அதனால் காதலும் துளிர்த்ததடி
அந்த காதலை நானும் மறு நொடி பார்த்தேன் மரமாய் அசையுதடி
இன்றோடு அடி இன்றோடு என் கவலை முடிந்ததே
ஒரு பெண்கோழி நீ கூவித்தான் என் பொழுதும் விடிந்ததே


பாடியவர்: ஹரிஸ் ராகவேந்திரா
படம்: திருவிளையாடல் ஆரம்பம்
இசை: D.இமான்