லட்சம் வார்த்தைகள் லட்சம் வார்த்தைகள்
முற்றும் தீர்ந்தன இங்கே இங்கே
ஒற்றை வார்த்தை ஒற்றை வார்த்தை
உற்றுத் தேடிடும் உள்ளம் இங்கே
காலம் எப்போதும் கையில் வராது
காதலை சொல்லிவை
பாஷை எல்லாமே ஊமை ஆனாலும்
கண்களை பேச வை
(லட்சம்..)
பெண்களுக்கு காதல் வந்தால்
பேச்சுதான் குளறுமே
ஞானம் எனும் சகதியிலே
வார்த்தைகள் புதையுமே
ஆண்மையிலும் காதல் சொல்லும்
ஆணைத்தான் ரசிக்குமே
மின்னலை வாழ்வு கொள்ளும்
மின்மினி பறக்குமே
(லட்சம்..)
பாடியவர்: ரஞ்சனி
படம்: மோதி விளையாடு
இசை: ஹரிஹரன் - லெஸ்லி
வரிகள்: வைரமுத்து
0 comments:
Post a Comment