20100330

நான் நடந்தால் அதிரடி...


உன் பின்னே என்றும் ரோஜா கூட்டம்

நான் நடந்தால் அதிரடி
என் பேச்சு சரவெடி 
என்னைச் சுற்றும் காதல் கொடி நீ
நீ நடந்தால் அதிரடி
உன் பேச்சு சரவெடி
உன்னைச் சுற்றும் காதல் கொடி நான்
நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம்
நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம்
உன் பேரைக்கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா

உள்ளத்தில் கூச்சல் நீ
உள்ளுக்குள் காய்ச்சல் நீ
இரத்தத்தில் காதல் நீச்சல் நீ
மின்மினி கூட்டம் நீ 
வெண்பனி கூட்டம் நீ
மாங்கனி தோட்டம் நீதானே
நீதான் நிலவு பெத்த மகள்
நீ இந்த நிலவின் அத்தை மகன்
முந்தானை வீடு மூங்கில் காடு
பத்து விரலாலே தீ மூட்டுவேன்
ஏன் இந்த வேகம் வேணாம் மோகம்
காமன் வீட்டுக்குள் நான் பூட்டுவேன்

மன்மத அம்பு நீ 
முறுக்கிய நரம்பு நீ
இரவினில் வம்பு தும்பு நீ
வண்ணத்துப்பூச்சி நீ
கண்களில் பேச்சு நீ
காதல் சாட்சி என்றும் நீ
நாந்தான் முரட்டு ஜல்லிக்கட்டு
நான் உந்தன் பசிக்கு புல்லுக்கட்டு
கைநீட்டும் தூரம் காட்சி மாறும்
போர்வை கண்டாலே போதை ஏறும்
உன் பின்னே என்றும் ரோஜா கூட்டம்
நானோ உன் கையில் பொம்மலாட்டம்

நான் நடந்தால் அதிரடி
என் பேச்சு சரவெடி 
என்னைச் சுற்றும் காதல் கொடி நீ
நீ நடந்தால் அதிரடி
உன் பேச்சு சரவெடி
உன்னைச் சுற்றும் காதல் கொடி நான்
நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம்
நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம்
என் பேரைக்கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்ட்டாதே எனக்கு டாட்டா
உன் பேரைக்கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்ட்டாதே எனக்கு டாட்டா


பாடியவர்கள்: நவீர், ஷோபா சந்திரசேகர், ஜனனி நாதன்
படம்: சுறா
இசை: மணிசர்மா

20100329

சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை...

பெண்ணுலகம் ரசிக்கும் பேரழகன் நீதான் 


சிக்கு சிக்கு மாமா சிக்குமாமா
சிக்கு சிக்கு மாமா சிக்குமா சிக்குமா
சிக்கு சிக்கு மாமா சிக்குமாமா
சிக்கு சிக்கு மாமா சிக்குமா சிக்குமா

சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
இருவருக்கு மட்டும் வேண்டும் ஒரு பூமி
காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி
சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
இருவருக்கு மட்டும் வேண்டும் ஒரு பூமி
காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி

என் வீட்டில் எல்லாபுறமும் உன்வாசம் நீ தந்தாய்
என் வீட்டில் எல்லாபுறமும் உன்வாசம் நீ தந்தாய்
சில நேரம் யாரைக்கேட்டு எனக்குள்ளே நீ சென்றாய்
என் காதல் தனியாக உன் பின்னே செல்கிறதே
என் நெஞ்சும் துயிலாமல் உன் மடியில் கிடக்கிறதே
சூரியனை தின்ற மல்லிகையும் நீதான்
வெண்ணிலவை தோளில் சுமந்தவனும் நீதான்

சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை

ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே
ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே
அழகான தவறுகள்கூட நீ செய்யப் பிடிக்கிறதே
அறியாத குழந்தைபோல் என் மனது குதிக்கிறதே
ஏதேதோ வேண்டும் என்று அடம்பிடித்து கேட்கிறதே
பட்டியலை எழுது தருகிறேன் நானே
ஒட்டுமொத்த தேவை நீ ஒருவன் தானே

சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
புன்னகைகள் சிந்தும் பொன்நகையும் நீதான்
பெண்ணுலகம் ரசிக்கும் பேரழகன் நீதான் 

பாடியவர்கள்: கார்த்திக், ரீதா
படம்: சுறா
இசை:மணிசர்மா 

போறாளே பொன்னுத்தாயி ...போறாளே பொன்னுத்தாயி 
போகிற போக்கில் மனசத் தொட்டு
தர பாக்கும் கருதப்போல வெட்கப்பட்டு

போறாளே பொன்னுத்தாயி 
புழுதிக் காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்குக் கட்டுப் பட்டு

வெள்ளாமை நீதான்
வெள்ளாடு நாந்தான்
வெட்கத்த விட்டுத் தள்ளம்மா

வெள்ளாம காட்ட
விட்டுத் தர மாட்டா
பண்பாட கட்டிக்காக்கும்
பட்டிக்காட்டுக் கருத்தம்மா

போறாளே பொன்னுத்தாயி 
புழுதிக் காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்குக் கட்டுப் பட்டு

படிக்காத புள்ள மனசெல்லாம் வெள்ளை
இவளது நாக்குல போக்குல மனசில கள்ளமில்ல

உன் மேலே கிறுக்கு
உள்ளூர இருக்கு
வாய்விட்டு சொல்லத்தானே 
தோதேயில்ல தோதேயில்லை
வைகைக்கு கடலை சேர 
யோகமில்ல யோகமில்ல

அது சரி வியாழனும் வெள்ளியும் 
இருப்பது தூரமில்ல
போறாளே பொன்னுத்தாயி 
போகிற போக்கில் மனசத் தொட்டு
தர பாக்கும் கருதப்போல வெட்கப்பட்டு

நீ கண்ட வள்ளி சப்பாத்திக் கள்ளி
கள்ளியின் இலையிலும் காயிலும் கனியிலும்
முள்ளிருக்கும்

அடி போடிக் கள்ளி
நீதாண்டி அல்லி
கண்டாங்கி சேலை கட்டும்
கண்ணகியே கண்ணகியே
உன் கொசுவத்தில் உசுர கட்டி
கொல்லுறியே கொல்லுறியே

வர வர பொம்பள பொழப்பையே 
வம்புல மாட்டுறியே
போறாளே பொன்னுத்தாயி 
புழுதிக் காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்குக் கட்டுப் பட்டுபாடியவர்கள்: சுஜாதா, உன்னிமேனன்
படம்: கருத்தம்மா
இசை: AR ரஹ்மான்
பாடல்: வைரமுத்து

20100320

ஒரு புன்னகை பூவே...
ஒரு புன்னகை பூவே சிறு பூக்களின் தீவே

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு

ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே
நீ என்னை மட்டும் காதல் பண்ணு
என் வாலிப நெஞ்சம் 
உன் காலடி கெஞ்சும்
சிறு காதல் பிச்சை போடு கண்ணு

நான் கெஞ்சி கேட்கும் நேரம்
உன் நெஞ்சின் ஓரம் ஈரம்
ஆ அச்சோ அச்சோ காதல் வாராதோ

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு


சூரியன் வாசல் வந்து ஐஸ்க்ரீம் கொடுக்கும்
உடாதம்மா விடாதம்மா
சந்திரன் உள்ளே வந்து சாக்லெட் கொடுக்கும்
சுத்தாதம்மா ரீலுதாம்மா

உன் படுக்கை அறையிலே
ஒரு வசந்தம் வேண்டுமா
உன் குளியல் அறையிலே
விண்டர் சீசன் வேண்டுமா
நீ மாற சொன்னதும்
நான்கு சீசனும் மாற வேண்டுமா
லவ் பண்ணு 

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு
லவ் பண்ணு லவ் பண்ணு


என்பது ஆண்டுகள் இளமை வேண்டுமா
மெய்யாகுமா மெய்யாகுமா
சொடக்கொன்று போட்டதும் சொர்க்கம் வேண்டுமா
மெய்யாகுமா மெய்யாகுமா
அட வெள்ளை வெள்ளையாய்
ஓர் இரவு வேண்டுமா
புது வெளிச்சம் போடவே
இரு நிலவு வேண்டுமா
உன்னை காலை மாலையும்
சுற்றி வருவது காதல் செய்யவே
லவ் பண்ணு ஐயோ பண்ணு

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு ஐயோ பண்ணு

ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே
நீ என்னை மட்டும் காதல் பண்ணு
என் வாலிப நெஞ்சம் 
உன் காலடி கெஞ்சும்
சிறு காதல் பிச்சை போடு கண்ணு


நீ கெஞ்சி கேட்கும் நேரம்
என் நெஞ்சின் ஓரம் ஈரம்
அச்சோ அச்சோ காதல் வந்தாச்சோ

பாடியவர்: கேகே
படம்: 12 B
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: வைரமுத்து

20100319

முதல் பெண் நீயே...முதல் பெண் நீயே
பார்த்தவுடன் கண் தானம்
செய்துவிட்டேன் அதன் பெயர்தான்
காதல் காதல்
இவள் தென்ப்பட்டால்
புன்னகையால் புண்பட்டேன்
என்னை நானே கைவிட்டேன்
ஏனோ ஏனோ
விண்மீன் மழைத்துளியாய்
என் மேல் பொழிந்தவளே
நெஞ்சம் மிதந்தேனே
உன்னாலே நானேஉந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே
உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே

(முதல் பெண்...)

நீங்காதே எனை நீங்காதே
வாங்காதே உயிரை வாங்காதே
இந்த காதல் வந்தால் காகித பூவில் கூட
வண்டுகள் மொய்க்கும் மொய்க்கும்
கண்களில் தீயை வைக்கும்
ஒரு மழை மேகத்தில்
தூங்கிய தண்ணீரை போல்
நெஞ்சுக்குள் தேங்கி இரு
என் காதல் தாகம் தீரு

உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே

உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே


(முதல் பெண்...)உன் முத்தம் என் உணவாகும்
உன் கண்கள் என் கனவாகும்
எந்தன் கோபம் யாவும் 
உன்னை பார்த்தால் தீரும்
நாட்குறிப்பெல்லாம் உந்தன்
ஞாபகம் காதல் கீதம்
ஒரு உயிர் போலவே
உன்னை பூட்டிவைப்பேன்
நெஞ்சில் வாழ்ந்துவிடு
நான் உந்தன் சொந்த வீடு ஓஹோ..

(முதல் பெண்...)

உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே
உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே


பாடியவர்கள்: ஜாவேட் அலி, சிந்து
படம்: தம்பிக்கு இந்த ஊரு
இசை: தரன்


20100318

இன்று நான் தனி ஆள் ஆனேன்...இன்று நான் தனி ஆள் ஆனேன்
என்னை யார் என நான் கேட்டேன்
கண்கள் இரண்டில் கண்ணீர் கசக்குதே
சொற்கள் முழுதும் சோகம் இசைக்குதே

இன்று நான் தனி ஆள் ஆனேன்
என்னை யார் என நான் கேட்டேன்
கண்கள் இரண்டில் கண்ணீர் கசக்குதே
சொற்கள் முழுதும் சோகம் இசைக்குதே


தாய் முகத்தை இனி நான் என்று பார்ப்பேனோ
தாய் மடியில் ஒரு தாலாட்டை கேட்பேனோ..
(இன்று...)

முதல் முதல் பேசிய அம்மா என்ற வார்த்தைக்கு
அர்த்தம் இன்றி வாழுகின்ற வாழ்க்கை ஏனோ ஏனோ
நேற்று வரை ஆனந்தம் இன்று முதல் தீப்பந்தம்
தொப்புள் கொடி என்னை விட்டு போனது எங்கே எங்கே
தண்ணீரில் நீந்தும் மீன் போல வாழ்ந்தேன்
கண்ணீரில் இன்று நானும் விழுந்தேன்
அம்மாவின் முத்தம் வாங்காத பிள்ளை நான் மட்டும் தானா
ஏன் பிறந்தேனோ..
(இன்று...)

தாயை காண வழி இல்லை 
தாலாட்டைப்போல் மொழி இல்லை
ரத்தம் எல்லாம் கண்ணீர் துளி ஆனதென்ன என்ன
பட்டாம்பூச்சி தலை மீது பாராங்கல்லை சுமந்தேனே
கண்ணீர் மழை தீக்குச்சியை பற்ற வைத்தார் யாரோ
ரெக்கைகள் இல்லா வண்ணத்துபூச்சி 
வானத்தை பார்த்து ஏங்குதம்மா
பூக்கள் கீழே விழுந்தால் பூமாலை ஆகும்
வாழ்க்கை கீழே விழுந்தால் வழி என்னவோ..
(இன்று...)


பாடியவர்: நரேஷ் ஐயர்
படம்: தம்பிக்கு இந்த ஊரு
இசை: தரன்

20100316

நீ காதலிக்கும் பொண்ணு...
நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே
Lets go

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே

அவ பார்க்கலேன்னு விட்டு விடாதே
உள்ளிருக்கும் காதலை தான் வெட்டி விடாதே
அட முள் இல்லா ரோஜாதான் இங்கு இல்லையே
குத்திபுட்ட கை எடுக்காதே
அவ கொட்டினாலும் கோவ படாதே

Love love love போட்டி இல்லா love
வேஷம் போடா தேவை இல்லை one side love

Love love love வார்த்தை இல்லா love
கனவுகளே வாழ்த்த போகும் one side love

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்ன
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே
என்ன ஒகே வா ?


ஹே கைய தொட்டா முத்தமிட்டா
முடிஞ்சு போகும் ரெண்டு பக்க காதலே
அவ மேலே பட்ட காத்துக்காக அட
ஏங்கும் தான் one side காதலே
ஹே பத்து நாளு காத்திருப்பேனே
அவ பார்வைக்காக பட்டினியா தெருவில் நிப்பேனே   

அவ திட்டினாலும் துப்பினாலும் கவலை இல்லையே
உள்ளம் கையில் வச்சிருப்போமே
அவளை நெஞ்சுக்குள்ளே தச்சிருப்போமே

Love love love காத்திருக்கும் love
கத்தியிலே கைய கீறும் one side love

Love love love தள்ளி போகும் love
மானமில்லே ரோஷமில்லே one side love

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்ன
கவலை படாதே கண்ணா கவலை படாதே

தோண்ட தோண்ட ஆழம் போக
தண்ணியோடடேஸ்ட் ரொம்ப ஜாஸ்திடா
ஏங்கி ஏங்கி வலி வாங்கி வாங்கி
கண்ட காதல் ஆயுள் ரொம்ப கெட்டிடா

தமிழகத்துல சோலி இல்லடா
நம்ம கிட்டே கட்டு கட்டா நோட்டும் இல்லடா
வெறும் மனசை மட்டும் பார்த்து
காதலிக்க தான் கொஞ்சம் நீயும் டைம் கொடேண்டா
அதுல வந்த காதல் வேற சுகமடா

Love love love telephone booth love
அவ குரலை மட்டும் கேட்டு வைக்கும் one side love

Love love love புனிதமான love
எந்த ஆம்பளைக்கும் முதல்லே வர்ற one side love

பாடியவர்: முகேஷ்
படம்: குட்டி
இசை: தேவிஸ்ரீ பிரசாத்

20100315

யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே ...யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே 
தூங்கும் என் உயிரை தூண்டியது 
யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே 
வாசம் வரும் பூக்கள் வீசியது 
தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம் 
மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம் 
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே 

நிலவாக உன்னை வானில் பார்த்தேன் 
அலையாக உன்னை கடலில் பார்த்தேன் 
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன் 
தேனாக உன்னை மலரில் பார்த்தேன் 
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே 


ஓ பேச சொல்கிறேன் உன்னை 
நீ ஏசி செல்கிறாய் என்னை 
வீணை தன்னையே மீட்டிக் கொண்டதா 
எண்ணிக கொள்கிறேன் அன்பே
காலம் என்பது மாறும் 
வலி தந்த காயங்கள் ஆறும் 
மேற்கு சூரியன் மீண்டும் காலையில் 
கிழக்கில் தோன்றி தான் தீரும்
நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா 
ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா 
உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா 

நிலவாக உன்னை வானில் பார்த்தேன் 
அலையாக உன்னை கடலில் பார்த்தேன் 
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன் 
தேனாக உன்னை மலரில் பார்த்தேன் 
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனேஓ பாதி கண்களால் தூங்கி 
என் மீதி கண்களால் ஏங்கி 
எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே 
கொண்டு சேர்க்கிறேன் தாங்கி
நேசம் என்பது போதை 
ஒரு தூக்கம் போக்கிடும் வாதை 
என்ற போதிலும் அந்த துன்பத்தை 
ஏற்று கொள்பவன் மேதை 
உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா?
எந்நாளும் மறவாத நாளாகி போகாதா?
இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா ?

நிலவாக உன்னை வானில் பார்த்தேன் 
அலையாக உன்னை கடலில் பார்த்தேன் 
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன் 
தேனாக உன்னை மலரில் பார்த்தேன் 
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே 

பாடியவர்கள்: சாகர், சுமங்கலி
படம்: குட்டி
இசை:தேவிஸ்ரீ பிரசாத்

20100307

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி...

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி

(அஞ்சலி)

காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி
கடலிலே மழைவீழ்ந்தபின் எந்தத்துளி மழைத்துளி
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப்பாடல் படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி

சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது
கோதையின் காதலின்று செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் தலைக்காதலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரல் வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி

அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால் கடும்மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே
நீயென்ன நிலவோடு பிறந்தவளா?
பூவுக்குள் கருவாகி மலர்ந்தவளா?
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி...

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரல் வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி


பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா 
படம்: டூயட்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து 

20100306

ஏ நெஞ்சே என் நெஞ்சே என்னை கேளாமல் ...படப்பட படவென அடிக்குது இதயம்
தடத்தட தடவென துடிக்குது இமைகள்
சலசல சலவென சுழழுது விழிகள்

அடுத்தது யாரோ அடுத்தது யாரோ
எடுப்பது யாரோ எடுப்பது யாரோ
எனதா உனதா எனவே எனவே
தவிக்குது தவிக்குது தவிக்குது தவிக்குது

ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்
ஹேஹேஹே காதல் ஒரு காந்தம்
எனக் கண்டேன் நான்
ம் ம் ம் ஈர்க்கும் அந்த திசைகள்
என்று வீழ்ந்தேன் நான்
மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு
சில்லென்று மலரை தொடுதே

என் நிலவில் மாற்றம்
எதிலும் தடுமாற்றம்
பார்வை பறிமாற்றம்
ஒரு ஆனந்த ஏக்கம்

கண்ணை விட்டு வெளியே
காணும் ஒரு கனவே
வருந்தி அழைத்தாலும்
இனி வாராது தூக்கம்

வெகு நேரம் பேசிய பின்பு
விடை பெற்று போகும் நேரம்
நான் அடிக்கும் நடக்கும் கால்கள்
நடை மறந்து திரும்பும் ஏனோ

பேசாத நேரம்தானே
பெரிதாக தோணும் அன்பே
காலங்கள் தோற்கும் இங்கே

நேற்று வரும் கனவில்
நிலவு வரவில்லை
அடம்பிடிக்கும் நிலவை
இனி நான் என்று பார்ப்பேன்

காதல் வரும்போது
கனவுகளும் மாறும்
நீ விரும்பும் நிலவை
இனி தினந்தோறும் பார்ப்பாய்

யார் யாரோ எழுதி சென்ற
புரியாத கவிதை எல்லாம்
நான் கேட்டு ரசித்தேன் நின்று

நான் பார்த்த மரமும் இலையும்
புது போர்வை போர்த்திக்கொண்டு
புது பார்வை பார்த்துக்கொண்டு
நம்மை பார்த்து சிரிக்கின்றதே


பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, சாதனா சர்கம்
படம்: ஏப்ரல் மாதத்தில்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: பா.விஜய்

20100305

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்...

கேட்க கேட்க மனதை சொக்க வைக்கும் வைரமுத்துவின் பாடல் வரிகள்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில்
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்


பெண்பால் கொண்ட சிறுதீவு
கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள்
வாய்பேசும் நீதான் எட்டாவது அதிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெறிக்கும் கன்னங்கள்
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா
படம்: ஜீன்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடல்: வைரமுத்து20100304

அறியாத வயசு ...அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
அடியாத்தி ரெண்டும் பறக்குதே
செடிபோல ஆசை மொளைக்குதே

வெட்டவெளிப் பொட்டலிலே மழைவந்தா
இனி கொட்டாங்குச்சி கூரையாக மாறிடும்
தட்டாம்பூச்சி வண்டியிலே சீர்வந்தா
இங்கே பட்டாம்பூச்சி வண்டியிலே ஊர்வரும்
ஓஹோ 

அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல
யாரும் மெனக்கெட்டுப் படிக்கல
எந்தக் கெழவியும் சொன்ன கதையில
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது
ஒறவுக்கு இதுதான் தலைமை
இதை உசுரா நெனைக்கும் இளமை
காதலே கடவுளின் ஆணை
அவன் பூமிக்குத் தொட்டுவச்ச சேனை
ஒடைமாத்தி நடைமாத்தி அடியாத்தி இந்த வயசுல
அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

கறந்தபாலையே காம்பில் புகுத்திட
கணக்குப் போடுதே ரெண்டுந்தான்
கோரைப்புல்லிலே மெட்டி செஞ்சுதான்
காலுல மாட்டுது தோளுல சாயுது
ஊரையும் ஒறவயும் மறந்து
நடுக்காட்டுல நடக்குது விருந்து
நத்தைக்கூட்டுல புகுந்து
இனி குடித்தனம் நடத்துமோ சேர்ந்து
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி இந்த வயசுல

அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்பாடியவர்: இளையராஜா
படம்: பருத்திவீரன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

20100303

காலங்களில் அவள் வசந்தம்...காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
ஓ..ஓ..ஒ..

பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி

காற்றினிலே அவள் தென்றல்

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

பால்போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி

பால்போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்ப்பதில் அன்னை

அவள் கவிஞனாக்கினாள் என்னை

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை


பாடியவர்: PB ஸ்ரீநிவாஸ்
படம்: பாவ மன்னிப்பு
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்

20100302

தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்...

தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான் தொடுவேன்
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திரியும் கற்பனைகள்
அன்பே நீ என் ஆயுள்தானே
அள்ளிக் கொள்ள வேண்டும் நானே
இரு விழி பார்வை ஊடகம்
இது ஒரு காதல் நாடகம்
என் வானில் என் வானில்
விண்ணிலெல்லாம் மழைத் துளியே

தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான் தொடுவேன்
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திரியும் கற்பனைகள்ஏழு வண்ணங்களின் நிறமா நீ
விண்ணின் தாவரத்தின் விதையா நீ
கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ
என்ன நீ என்ன நீ
பூவில் பூத்திருக்கும் பனியா நீ
மௌனக் கூச்சலிடும் இசையா நீ
முத்தம் சேகரிக்கும் முகமா நீ
தூண்டில் பார்வையால் தொலைந்து விட்டேன்

ஆசைமீறி அலைகள் மனசுக்குள்
மெல்ல மெல்ல வீசுதடா
ஆனால் இதழ்கள் வற்றி உள்ள
உண்மை சொல்ல கூசுதடா


தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான் தொடுவேன்
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திரியும் கற்பனைகள்
கண்ணால் காதலினை மெதுவாய் சொல்
இல்லை காதுக்குள்ளே இதமாய் சொல்
உள்ளம் தாங்கவில்லை உடனே சொல்
சொல்லடி சொல்லடி
பாதி ராத்திரியில் விழித்தேனே
ஜன்னல் வெண்ணிலவை ரசித்தேனே
உந்தன் பேரைச் சொல்லி அழைத்தேனே
ஊஞ்சல் மேகமாய் பறந்து விட்டேன்

உன் போல் இவளின் விழிக்குள்ளே
தூக்கம் தூக்கம் இல்லையடா
ஏனோ இதயம் அடிக்கடி
ஏக்கம் ஏக்கம் தொல்லையடா

தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான் தொடுவேன்
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திரியும் கற்பனைகள்
அன்பே நீ என் ஆயுள்தானே
அள்ளிக் கொள்ள வேண்டும் நானே
இரு விழி பார்வை ஊடகம்
இது ஒரு காதல் நாடகம்
என் வானில் என் வானில்
விண்ணிலெல்லாம் மழைத் துளியேபாடியவர்கள்: ஹரிசரண், மாயா
படம்: தீபாவளி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
20100301

என்னை தாலாட்ட வருவாளோ...என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ.
தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா
முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
(என்னை தாலாட்ட)

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவு பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்

நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ.
தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா
முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே


எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்

கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்
(என்னை தாலாட்ட)

பாடியவர்: ஹரிஹரன்
படம்: காதலுக்கு மரியாதை
இசை: இளையராஜா
பாடல்: பழனி பாரதி