20111031

இப்படி மழை அடித்தால்...




இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்


இப்படி கண் இமைத்தால்
நான் எப்படி உன்னை ரசிப்பேன்
இப்படி நீ சிரித்தால்
நான் எப்படி உயிர் பிழைப்பேன்

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்

இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்

இப்படி இப்படியே வழி மறித்தால்
எப்படி எப்படி நான் நடந்திடுவேன்

இப்படி இப்படியே முகம் சிவந்தால்
எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன்

இப்படி இப்படியே பூ கொய்தால்
எப்படி எப்படி நான் மணம் விடுவேன்

இப்படி இப்படியே தடை விதித்தால்
எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன்

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்

இப்படி இப்படியே பூட்டி கொண்டால்
எப்படி எப்படி நான் திறந்திடுவேன்

இப்படி இப்படி நீ அடம் பிடித்தால்
எப்படி எப்படி நான் விலகிடுவேன்

இப்படி இப்படியே கிறங்கடித்தால்
எப்படி எப்படி நான் உறங்கிடுவேன்

இப்படி இப்படி நீ காதலித்தால்
எப்படி எப்படி நான் மறுத்திடுவேன்

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்

பாடியவர்கள்: கார்த்திக், சைந்தவி
படம்: வெடி
இசை: விஜய் ஆண்டனி 
பாடல்: முத்துகுமார்.

0 comments:

Post a Comment