என்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு
எங்குமே உன் முகம் பார்க்கிறேன்
என்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு
மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்
என் வானிலே வெண்ணிலா உன் முகம்
வாராமலே பேசுதே என்னிடம்
இது காதலா... காதலா...
என்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு
எங்குமே உன் முகம் பார்க்கிறேன்
ராத்திரிகள் நேரம் ரதி தேவி மத கோலம்
கனவாக தினம் தோறும் வரக் கண்டேனே
சாலைகளின் ஓரம் நிழல் தேடும் வெயில் நேரம்
தொட பார்க்கும் சிறு காற்றாய் உன்னைக் கண்டேனே
புதை மண்ணிலே காலை வைத்தேன்
நகக் கண்ணிலே ஊசி தைத்தேன்
படும் வேதனை சொல்லும் காதலை
என்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு
எங்குமே உன் முகம் பார்க்கிறேன்
வீடுவரை சென்றேன் படி ஏறவில்லை நின்றேன்
என்னை தேடி வருவாயோ எனப் பார்த்தேனே
பாடம் படிக்காமல் உயிர் தோழி பிடிக்காமல்
நகராத கெடிகாரம் அதை பார்த்தேனே
நிலா ஆண்டுகள் நூறு வேண்டும்
இதே போலவே வாழ வேண்டும்
உடல் என்னிடம் உயிர் உன்னிடம்
என்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு
எங்குமே உன் முகம் பார்க்கிறேன்
என்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு
மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்
என் வானிலே வெண்ணிலா உன் முகம்
வாராமலே பேசுதே என்னிடம்
இது காதலா... காதலா...
பாடியவர்கள்: விஜய்யேசுதாஸ், ஜானகி ஐயர்
படம்: வெடி
இசை: விஜய் ஆண்டனி
பாடல்: நா முத்துகுமார்
0 comments:
Post a Comment