20101217

விண்ணைக் காப்பான் ஒருவன்...விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்

எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமி
நீ சாதி இல்லை என்பவனே நல்லச் சாமி
அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி-அட
ஆட்டமுன்னா என்னவென்னு ஆடிக்காமி
விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்

ஏறு முன்னேறு ஏறு 
பேரு வரும் பேரு பேரு
ஊரு அட யாதும் இங்க நம்ம ஊரு
ஓடு தெம்போடு போடு 
கூடு அன்போடு கூடு
வாழ்வில் அட வந்து போகும் பள்ளம்மேடு

எடுடா மேளத்த தாளத்த வேகத்த இனிமேதான் வித்த
மொத்தக் கூட்டத்த கூட்டித்தான் கொண்டாடு..

நம்ம சொந்தத்த பந்தத்த நெஞ்சத்த திருநாளில் கண்டு
ஒன்னாஉறவாடு அன்போட விளையாடு

ஆலாலகண்டனே ஆட்டத்துக்கு மன்னனே
ஆனந்தத் தாண்டவம் ஆடுவோமே
விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்

விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்

யாரு இள நெஞ்சில் யாரு 
கூறு அவன் காதில் கூறு
ராதை மனம் சொன்னதெல்லாம் கண்ணன் பேரு

ஊரு திருநாளில் ஊரு 
ஓடும் திருவாரூர் தேரு
ஆட்ட பலி கேட்டதில்ல ஐயனாரு

அன்பின் வழியொன்று மொழியொன்று 
என்றானால் உலகெல்லாம் ஒன்று
வெற்றிக் கொடிகட்டு பறக்கட்டும் முன்னாலே
அச்சம் விலகட்டும் விலகட்டும் மறையட்டும் 
அதைத் தூக்கிப் போடு
வீரம் விளையட்டும் விளையட்டும் மண்மேலே

நான் பாட்டுப் பாடுனா நாடாடும் ஆடும்ன்னா
நல்லசேதி யார்சொன்னாலும் கேட்டுப் போன்னா
விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்
எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமி
நீ சாதி இல்லை என்பவனே நல்லச் சாமி
அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி-அட
ஆட்டமுன்னா என்னவென்னு ஆடிக்காமி


பாடியவர்கள்: திப்பு, ஸ்வேதா
இசை: வித்யாசகர்
படம்: காவலன்
பாடல்: பா விஜய்

0 comments:

Post a Comment