20100225

காதலுக்கு கண்கள் இல்லை ...



காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே
ஆனா இப்போ ம்ம்ம்...
காதலாலே பூமி இங்கு சுத்துது என்றானே
காதில் பூவை சுத்தாதென்று சொன்னேன் நானே
ஆனா இப்போ ம்ம்ம்....
லூசு ரெண்டு சேர்ந்தாலே சும்மா பேசிக் கொண்டாலே
காதல் வரும் தன்னாலே என்றேன் நானே
பீச்சில் வந்து சுண்டல் தீர்ந்து போச்சு என்றாலே
காதல் கூட தீரும் என்றேன் நானே
ஒ ஒ ஒ என்ன ஆனதோ ஹார்மோன்கள் கொஞ்சம் மாறுதோ
ஒ ஒ ஒ எந்த நாள் முதல் என் காதல் அவள் ராகத்தில்
(காதலுக்கு...)

அப்பன் காசெல்லாம் செல் போன் பில்லுக்கே
காலி ஆச்சு என்று சொன்னால் கேலி செய்தேனே
ஆனா இப்போ ம்ம்ம்...
தன்னந் தனிமையிலே தானே பேசையிலே
நைட் அடிச்ச மப்பு இன்னும் இறங்கல என்றேனே
ஆனா இப்போ ம்ம்ம்...
காதல் என்னை என்ன செய்யும்
ஓவர் திமிரில் அழைந்தேன் நானே
நானும் இன்று கியூவில் நின்று
இதயத்தை பறி கொடுத்தேனே
(ஒ ஒ ஒ...)
(காதலுக்கு..)

ஓ கண்ணில் நுழைவாளாம் நெஞ்சில் நுழைவாளாம்
ஏண்டா இந்த பில்டப் என்று கூலா கேட்டேனே
ஆனா இப்போ ம்ம்ம்...
ஆதாம் முட்டாளா ஏவாள் முட்டாளா
பட்டி மன்றம் வைத்து பார்க்க ஆசை பட்டேனே
ஆனா இப்போ ம்ம்ம்,,,
கோடிப் பொய்கள் கட்டிய மூட்டை 
காதல் என்று சொன்னேன் நானே
பொய்கள் எல்லாம் பொய்யாய் போக 
மெய்யினில் உணர்ந்து கொண்டேனே
(ஒ ஒ ஒ...)
(காதலுக்கு...)


பாடியவர்: தேவிஸ்ரீ பிரசாத்
படம்: சந்தோஷ் சுப்ரமணியம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்


0 comments:

Post a Comment