20100201

எங்கே எங்கே மனிதன் எங்கே...எங்கே எங்கே மனிதன் எங்கே
மனிதன் உடையில் மிருகம் இங்கே
ஓநாய் உள்ளம் நரியின் கள்ளம்
ஒன்றாய் சேர்ந்த உலகம் இங்கே
வலிகளால் அந்த வரங்களால்
வாழ்க்கையில் ஞானம் கொண்டேன்

காதல் என்றால் கண்ணில் யுத்தம்
கண்ணீர் எல்லாம் வெள்ளை ரத்தம்
உறவும் நட்பும் பிம்பம் பிம்பம்
உள்ளம் எங்கே நம்பும் நம்பும்
பொய்களின் கரைக்கு நடுவிலே
போகுதே வாழ்க்கை நதி

ஜனனம் உண்மை மரணம் உண்மை
தந்தானே கடவுள் தந்தானே
அந்த ரெண்டை தவிர எல்லாம் பொய்யாய் 
செய்தானே மனிதன் செய்தானே

கடுகை பிளந்து காணும் போது 
வானம் இருந்திடக் கண்டேன்
நான் உறவை திறந்து காணும் போது
உலகம் தெரிந்திடக் கண்டேன்
என் உடலைத் தொட்டாய் நான் மனிதன் ஆனேன்
என் உயிரைத் தொட்டால்... நான் கடவுள் ஆவேன்

இங்கே இங்கே மனிதன் இங்கே
இமயம் தாங்கும் இதயம் இங்கே
காடும் மரமும் என் காலில் பூக்கள்
குன்றும் மலையும் கூலாங்கற்கள்
சம்பலில் உயிர்க்கும் பறவைபோல்
சாதிக்கவே பறக்கின்றேன்
சாதிக்கவே பறக்கின்றேன்

பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
படம்: அசல்
இசை: பரத்வாஜ்

0 comments:

Post a Comment