20100223

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல...




சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே!
கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே!

உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல
கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ!
உன்னை உன்னைத் தேடித் தானே
இந்த ஏக்கம் இந்தப் பாதை
இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ!

கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே!

Ha.. Ha.. Ha..
Ha.. Ha.. Ha..

ஓ..
நதியே நீ எங்கே என்று
கரைகள் தேடக் கூடாதா!
நிலவே நீ எங்கே என்று
முகில்கள் தேடக் கூடாதா!

ஓ..
மழை இரவினில் குயிலின் கீதம்
துடிப்பதை யார் அறிவார்
கடல் நொடியினில் கிடக்கும் பலரின்
கனவுகள் யார் அறிவார்

அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே
பூவின் உள்ளே நிலவின் கீழே
தீயின் கீழே கரைக்கு வெளியே இல்லையே
உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்
உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில் உந்தன் உயிரில் 
உள்ள வழியே..

எனக்கே நான் சுமையாய் மாறி
என்னைச் சுமந்து வந்தேனே!
உனக்கே நான் நிழலாய் மாறி
உன்னைத் தேடி வந்தேனே!

விழி நனைத்திடும் நேரம் பார்த்து
இமை விலகி விடாது
உயிர் துடித்திடும் உன்னை எந்தன்
உயிர் ஒதுக்கி விடாது

உலகம் ஒரு புள்ளியாகுதே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஓர் பூ வெடிக்குதே
சுகமோ வலியோ எல்லை மீறுதே

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே!
ஒரு இமையெங்கிலும் தேனில் மூழ்க
ஒரு இமை மாத்திரம் வலியில் நோக
இடையினில் எப்படி கனவும் காணுமோ!

உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல
கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ!
உன்னை உன்னைத் தேடித் தானே
இந்த ஏக்கம் இந்தப் பாதை 
இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ!



பாடியவர்கள்: ஜாவட் அலி,மதுஸ்ரீ
படம்: சர்வம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா





0 comments:

Post a Comment