20100203

மனதின் அடியில் மழை தூரல்...


மனதின் அடியில் மழை தூரல்
இதமாய் விழுந்தால் அது காதல்
முதலில் விழி வழியில் நுழையும்
மெதுவாய் உயிர் வரையில் நிறையும்
முழுதாய் சுயம் உடைத்தே கரையும் உறையும்
இளமை எரியும்

தீம் தனனன தீம் தனனன
தினம் வானம் நிறம் மாறும்
தீம் தனனன தீம் தனனன
மனம் தெரிந்தே பறிபோகும்

சரி எது என தெரியும் முன்னே
அதன் போக்கில் நமை மாற்றும்

மனதின் அடியில் மழை தூரல்
இதமாய் விழுந்தால் அது காதல்

பார்வைகளின் ஆழத்திலே
உள்ளம் கொஞ்சம் மூழ்கிப்போகும்
வார்த்தைகளின் வாசத்திலே
மௌனம் இதழ் பூக்கும்

மகரந்த வெயில் வழிகிற மஞ்சள்
தருகிற புது பரவசம் நெஞ்சில்
இனம் புரியா கலவரம் இதுதானா

ஏதோ ஒன்று உள்ளே நின்று
உன்னை கட்டி இழுக்கும் இழுக்கும்
தொலைந்ததை தேடிச் சென்று
இருப்பதை தொலைக்கும்

உயிர்வரை ஒரு வலி வந்து தீண்டும்
பலமுறை அது வரையறை தாண்டும்
அடம் பிடிக்கும் இதயம் சரிதானா

மனதின் அடியில் மழை தூரல்
இதமாய் விழுந்தால் அது காதல்

முதலில் விழி வழியில் நுழையும்
மெதுவாய் உயிர் வரையில் நிறையும்
முழுதாய் சுயம் உடைத்தே கரையும் உறையும்
இளமை எரியும்

தீம் தனனன தீம் தனனன
தினம் வானம் நிறம் மாறும்
தீம் தனனன தீம் தனனன
மனம் தெரிந்தே பறிபோகும்

சரி எது என தெரியும் முன்னே
அதன் போக்கில் நமை மாற்றும் ஓ..ஓ

பாடியவர்: பிரியதர்ஷினி
படம்: முன்தினம் பார்த்தேனே
இசை: தமன்
பாடல்: பிரியன்

0 comments:

Post a Comment