உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்..
ஒரு ஞாபக அலை என வந்து
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே
என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்
பெண்ணாக இருந்தவள் உன்னை
நான் இன்று காதல் செய்தேன்
உன்னோட அறிமுகத்தாலே
நான் உன்னில் மறைமுகம் ஆனேன்
நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
ஹேய்..
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்..
ஆஹா எது இதுவோ
எது இதுவோ
உன் மௌனம் சொல்கின்ற
எழுத்தில்லா ஓசைகள்
ஏன் என்று நான் சொல்லுவேன்
இது அதுவோ.. ம்ம்ம்...
இது அதுவோ
சொல்லாத சொல்லுக்கு
இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களோ
பெண் தோழன் நான்
ஆண் தோழி நீ
நட்புக்குள் நம் காதல் வாழும்
ஆண் ஆசை நான்
பெண் ஆசை நீ
ஆசைகள் பேர் ஆசைதான்
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்..
ஓஹோ உனதருகே
இருப்பதனால்
இரவுக்கு தெரியாத
பகலுக்கு புரியாத
பொழுதொன்று நீ காட்டினாய்
இதயத்தில் நீ
இருப்பதனால்
நான் தூங்கும் நேரத்தில்
என் உள்ளே தூங்காமல்
நெஞ்சுக்குள் வாயாடினாய்
கண்ணாடி நீ
கடிகாரம் நான்
உன் உள்ளே நான் ஓடோடி வாழ்வேன்
காதல் எனும் கடுதாசி நீ
என்றென்றும் அன்புடன் நான்
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
ஹேய்..
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்..
பாடியவர்கள்: கார்த்திக், சுமங்கலி
படம்: சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
0 comments:
Post a Comment