20100203

பேசும் பூவே ..


பேசும் பூவே பேசும் பூவே
காதல் வீசும் கன்னி தீவே
வானம் பூமி காணவில்லை
ஏது செய்தாய் கூறடி

என் உயிரும் பூத்ததே 
உன்னையே எண்ணி
என் உலகம் ஏங்குதே 

பெண்ணே உன் கண்களா
உன் கன்னமா உன் பின்னலா
உன் தேகமா உன் ஆசையா
உன் வார்த்தையா உன் வாசம்தான்
எனை ஈர்த்ததா?
உன் வெட்கமா உன் வேகமா
உன் கிண்டலா உன் கிள்ளலா
உன் துள்ளலா உன் பார்வையா
உன் அன்புதான் 
என்னை ஈர்த்ததா?
ஈர்த்ததா ஈர்த்ததா?

காதல் காற்றே
காதல் காற்றே
கலைந்து போனேன்
உன்னை பார்த்தே

I like your eyes
I like your smile
The way you talk
You are so inviting

மமதையோடு திரிந்த நாட்கள்
முழுதும் மாற்றி உணர வைத்தாய்
உன் பார்வையால் உன் பார்வையால்

முந்தினம் முந்தினம் உன்னை பார்த்தேனே
என் பெயர் என்னையே நானும் கேட்டேனே
எந்திரம் எந்திரம் போல ஆனேனே

அன்பே 
உன் சொற்களா உன் மௌனமா 
உன் மென்மையா உன் உண்மையா 
உன் உள்ளமா உன் கள்ளமா 
உன் வீரம்தான் 
எனை கொன்றதா
உன் மீசையா 
உன் தோள்களா உன் தோற்றமா 
உன் பார்வையா உன் வேர்வையா
உன் மச்சமா உன் அச்சம்தான் 
எனை தின்றதா

என் உயிரும் பூத்ததே
உன்னையே எண்ணி எண்ணி
என் உலகம் ஏங்குதே

பெண்ணே உன் கண்களா
உன் கன்னமா உன் பின்னலா
உன் தேகமா உன் ஆசையா
உன் வார்த்தையா உன் வாசம்தான்
எனை ஈர்த்ததா?
உன் வெட்கமா உன் வேகமா
உன் கிண்டலா உன் கிள்ளலா
உன் துள்ளலா உன் பார்வையா
உன் அன்புதான் 
என்னை ஈர்த்ததா?

பேசும் பூவே பூவே..பூவே..

பாடியவர்கள்: கிரீஷ், சுசித்ரா
படம்: முந்தினம் பார்த்தேனே
இசை: தமன்
பாடல்: விவேகா

0 comments:

Post a Comment