20100208

தேடி தேடியே...


தேடி தேடியே மின்னல்
உள் நெஞ்சில் பாய்கிறதே
ஓடும் காலமே சற்று
எனை நின்று பார்க்கிறதே
சுற்றும் பூமியே என்னை
ஒரு வட்டம் இடுகிறதே
உனை பார்க்கும்போதே 
பார்க்கும்போதே பார்க்கும்போதே

மாயா 
நீ மாயா 
தீ வைத்தாயா
மாயா இல்லை மெய்யா 
உன் அனலாலே
சரிகம 
எனை தகித்தாயே
உன் நினைவாலே 
மனதினில் பனி பொழிந்தாயே
பாவையாலே காயம் ஆனேன்
மூங்கில் பாட்டானேன்

மாயா 
ஆடி பாடி வரும் வன்முறையா நீ 
மாயா 
பிஞ்சு குழந்தையின் முதல் சிரிப்பா நீ 
மாயா

வா...டா..

மெல்ல மெல்ல தொடும் வஞ்சி இனமா நீ
தொட்டுவிட்டு செல்ல விடுகதையா நீ

வா...டா...


சத்தம் இன்றி நானா 
உள்ளம் கலைத்தேனா
உன்னை கனிந்தேனா 
சித்தம் சிதைத்தேனா
எங்கும் நிறைந்தேனா
கோடி சூரியனை போல் நெஞ்சில் உதித்தாய்
கொஞ்சும் வெண்ணிலவை போல் என்று மலர்ந்தாய்

பாவையாலே காயம் ஆனேன்
மூங்கில் பாட்டானேன்

ஏதோ ஏதோ புது மாற்றம்
உன் கண்ணில் தெரிகிறதோ
மௌனமாக உன் இதயம்
உனை விட்டு செல்கிறதோ
வேறு வேறு நாம் இல்லை
என காற்றும் சொல்கிறதோ

நமை பார்க்கும்போதே பார்க்கும்போதே
பார்க்கும்போதே பார்க்கும்போதே

ஏதோ ஏதோ புது மாற்றம்
உன் கண்ணில் தெரிகிறதா
மௌனமாக உன் இதயம்
உனை விட்டு செல்கிறதா
வேறு வேறு நாம் இல்லை
என காற்றும் சொல்கிறதா

நமை பார்க்கும்போதே பார்க்கும்போதே
பார்க்கும்போதே பார்க்கும்போதே

மாயா
உயிர் என்பாயா
உறவென்பாயா
காத்திருந்தாயா
ஓ..ஓ..

பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஜனனி
படம்: முன்தினம் பார்த்தேனே
இசை: தமன்
பாடல்: ரோஹினி0 comments:

Post a Comment