20110824

ஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...
ஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு
தாயக தந்தை மாறும் புது காவியம்
இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..

ஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு


முன்னம் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே
இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேட்குதே
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே

ஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு


கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதை இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரமானதே
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்க்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே

ஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு

பாடியவர்: ஹரிசரண்
படம்: தெய்வத் திருமகன் 
இசை: ஜி வி பிரகாஷ் குமார் 
பாடல்: நா.முத்துக்குமார்

2 comments:

Radhakrishna said...

அருமையான பாடல் வரிகள், பகிர்வுக்கு நன்றி ..

ஷகிலா said...

நன்றி! ராதாகிருஷ்ணன்.

Post a Comment