20100119

ஏழேழு தலைமுறைக்கும் ...ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணைபுரம்
ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணைபுரம்
முல்லையாரு முதல் முதலா முத்தமிடும் அந்த இடம்
எல்லைகளை தாண்டி வந்த எங்க அப்பன் பொறந்த இடம்
(ஏழேழு..)

வீரப்பாண்டி மாரியம்மா எங்குமுள்ள காளியம்மா
தாய் சீல காரியம்மா தந்தா மங்களம்மா
பாட்டி சின்ன தாயி தந்த பாசமுள்ள பாவலரு
கூட்டி எடுத்துத் தந்த பாட்டு பொங்குதம்மா
பட்டிக்காட்ட விட்டுப்புட்டு பட்டணத்தில் குடி புகுந்து
மெட்டுகளை கட்டி தந்த மொத்த சொத்தும் எங்களுக்கு
ஆத்தி என்ன சொல்ல
அன்புக்கும் பண்புக்கும் அளவு எங்கிருக்கு

அப்பருந்து இப்ப வர எங்களுக்கு என்ன குறை
எப்போழுதும் மக்களுக்கு சொல்வோம் நன்றிகளை

ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணைபுரம்

அள்ளி உரலுல நெல்ல போட்டு
அழுத்தி அழுத்தி குத்துங்கடி
அத்த மகனைத்தான் பாத்துக்கிட்டு
அமுக்கி புடிச்சு குத்துங்கடி
நம்ம நெல்லு குத்துகிற அழகைக் கண்டு
மச்சான் நேருல வர்றத பாருங்கடி
அவன் நேருல வர்றத பார்த்துப்புட்டு
நம்ம நெஞ்சு துடிக்குது கேளுங்கடி

மேத்து மழை சாரலிலே மேஞ்சு வந்த மேகம் எல்லாம்
கோர்த்து தந்த பாட்டு சத்தம் எப்போதும் கேட்கும்

நாத்தெடுத்து நடவு நட்டு நம்ம சனம் பாடுனது
ஊர் அறிய கேட்கும்போது உற்சாகமா தோணும்

அப்பனோட அறிவிருக்கு அன்னையோட அரவணைப்பு
சத்தியமா நிச்சயமா அஸ்திவாரம் எங்களுக்கு
தாயின் அன்பிருக்கு அது கொடுக்குது மகிழ்ச்சி உங்களுக்கு

வயலுல வெளஞ்ச நெல்லு நகரத்த தேடி வந்து
பசிகளை தீர்ப்பதுப்போல் பாரு எங்க கதை
ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணைபுரம்
முல்லையாரு முதல் முதலா முத்தமிடும் அந்த இடம்
எல்லைகளை தாண்டி வந்த எங்க அப்பன் பொறந்த இடம்
ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணைபுரம்

பாடியவர்கள்: பவதாரினி, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன்
படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: கங்கை அமரன்

0 comments:

Post a Comment