20100119

இதுவரை இல்லாத உணர்விது...


இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ


இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே


மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே

இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொல்ல
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்

அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்

இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உணர்வுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே


மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உணர்வுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே


தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே


பாடியவர்கள்: அஜீஷ், ஆண்ரியா
படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: கங்கை அமரன்




இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தை துண்டாக்கும் நினைவிது
மனதினை மண்ணோடு புதைத்திடும்
பெண்ணை நம்பாதே

காதல் என்றால் அத்தனையும் கனவு
கண் மூடியே வாழ்கின்ற உறவு
பெண்கள் என்றால் ஆணை கொல்லும்
நோய் ஆனதே

ஐயோ இந்த இளமையின் தொடக்கம்
இன்றே முற்றுப்புள்ளி
அதை சொல்லாமல் சொல்லி
நம்மை பைத்தியம் ஆக்கும்
பெண்ணை தேடி தொலையாதே



பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல் கங்கை அமரன்

2 comments:

Anonymous said...

my favor song

ஷகிலா said...

O very nice thank you.

Post a Comment