20100109

ஓ பேபி நீ தேவாமிர்தம்...



ஓ பேபி நீ தேவாமிர்தம்
பேபி நீ பஞ்சாமிர்தம்
பேபி நீ புஷ்பத்தாவரம்

ஓ பேபி நீ தீபாவளி
பேபி நீ சூராவளி
பேபி நீ வாச மார்கழி

அம்மாடி அவ பாதம் பட்டா பாற பூவாகும்
அப்பாடி அவ கையி பட்டா நீரும் சாராயம்
ஐயோடி அவ என்ன என்ன தொட்டா
என்னாகும் என்னாகும்
(ஓ பேபி..)

ஏ ஆலமர காக்கா அவ சோறு வைக்க ஏங்கும்
ஏ ஓடக்கரை மீனு அவ கால கொத்த ஏங்கும்
ஏ காஞ்சிபட்டுச் சேல அவ கட்டிக் கொள்ள ஏங்கும்
ஏ நாகலிங்க பூவு அவ வாசத்துக்கு ஏங்கும்

சோல காத்தாடியா செவத்தப்புள்ள நின்னாடா
செத்துப்போன எல்லாருமே திரும்பி வந்தாண்டா
காதல் பூசாரியா கனவு பூச செஞ்சாடா
கல் விழுந்த கொளத்த போல அலம்ப வச்சாடா
(அம்மாடி..)

நான் காலமெல்லாம் வாழ அவ கண்ணழகு போதும்
என் ஆசை எல்லாம் பேச அவ காதழகு போதும்
நான் தாலிக்கட்டும் போது அவ தல குனிஞ்சா போதும்
நான் நாலுபுள்ள கேக்க அவ நெகங்கடிச்சா போதும்

ஊத்துத் தண்ணீரா உள்ளுக்குள்ள பூத்தாடா
உலகெல்லாம் அவதான்னு உணர வச்சாடா
காத்து கருப்பாட்டம் கண்ணோட சேர்ந்தாடா
கனவுக்குள்ள ஸ்ரீதேவியா கதபடிச்சாடா
(அம்மாடி..)



பாடியவர்கள்: ராகுல் நம்பியார், சங்கீதா
படம்: மலைக்கோட்டை
இசை: மணிஷர்மா


0 comments:

Post a Comment