20110901

சொன்னா புரியாது ...


அண்டம் நடுநடுங்க ஆகாசம் கிடுகிடுங்க
சென்னை சங்கமத்தில் தங்க மெடல் வாங்கிய நாங்க
கரைக்குடி கரகாட்ட கோஷ்டிதானே
கும்பிட்டு கூப்பிடுறோம் கூத்தாட வாருமய்யா

காவேரி நீரைப் போல 
சலங்கை மணி குலுங்கி நிற்க
தஞ்சாவூர் தப்பு ஆட்டக் குழுவிருக்கு
பத்துமணிபறக்க பாத்து நீயும் வாருமய்யா
ஆட்டத்தில் பொறி பறக்க ஆசானே ஆடுமய்யா

காருகுறிச்சி நாதஸ்வரம் வாரு உரிச்ச உருமி மேளம்
திருநெல்வேலி சீமையோட சுடலைமாட சாமி ஆட்டம்
சொக்கனே சூறைக்காத்தாய் 
சுழன்று சுழன்று ஆடுமய்யா
சொக்கிவிடும் நம்ம கூட்டம் சூப்பராதான் பார்க்குமய்யா
சொக்கனே சூறக்காத்தாய் வாருமய்யா

பாடியவர்: வீரசங்கர்



சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கயெல்லாம் என்மேல வெச்ச பாசம்


சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கயெல்லாம் என்மேல வெச்ச பாசம்
ஒண்ணா பொறந்தாலும் இது போல இருக்காது
நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்

வேலாயுதம் பேரு என் பத்து விரல் வேலு
நிக்காது இந்த காலு கொட்டிருச்சுடா தேளு

சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கயெல்லாம் என்மேல வெச்ச பாசம்
ஒண்ணா பொறந்தாலும் இது போல இருக்காது
நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்

தலையில் ஆடும் கரகம் இருக்கும்
தலையில கனம்தான் இருந்ததில்ல
தாரை தப்பு ஆட்டம்தான் இருக்கும்
தப்பான ஆட்டம் நா போட்டதில்ல
புலி வேஷம் போட்டுக்கிட்டு
புலி ஆட்டம் ஆடுறேன்
வேட்டையாடி மட்டும் நானும் வாழ்ந்ததில்ல
சண்டையில எம்ஜியாரு
சாடையில்ல அய்யனாரு
தில்லிருந்தும் வம்பு சண்ட போட்டதில்ல

வரப்ப மிதிச்சு ராப் பகலா உழைச்சு
வாழுற ஜனங்க நம்ம கட்சி
இவங்க மனச சந்தோஷ படுத்த
தப்பு நீ செஞ்சாலும் ரைட்டு மச்சி
ஆடுகிற ஆட்டதுக்கு கூடுகிற கூட்டத்துக்கு
கைய வெச்சு இப்போ நானும் கும்படுறேன்
உங்க வீட்டு செல்ல புள்ள
என்ன போல யாரும் இல்ல
உங்களைதான் எப்போவோமே நம்பிடுறேன்

சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கயெல்லாம் என்மேல வெச்ச பாசம்
ஒண்ணா பொறந்தாலும் இது போல இருக்காது
நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்

வேலாயுதம் பேரு என் பத்து விரல் வேலு
நிக்காது இந்த காலு கொட்டிருச்சுடா தேளு

பாடியவர்: விஜய் ஆண்டனி
படம்: வேலாயுதம்
இசை: விஜய் ஆண்டனி
பாடல்: சிவ சண்முகம்

1 comments:

ReeR said...

பாடல் நன்றாக இருக்கிறது...

நன்றி

www.padugai.com

Post a Comment