20110901

ரத்தத்தின் ரத்தமே...
ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே


அம்மாவும் அப்பாவும் 
எல்லாமே நீதானே
என் வாழ்கை உனக்கல்லவா
செத்தாலும் புதைத்தாலும்
செடியாக முளைத்தாலும்
என் வாசம் உனக்கல்லவா

ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே

அன்பென்ற ஒற்றை சொல்லை போல் 
ஒன்று வேறு இல்லை
நீ காட்டும் பாசத்துக்கு
தெய்வங்கள் ஈடு இல்லை
என் நெஞ்சம் உன்னை மட்டும்
கடிகார முள்ளாய் சுற்றும்
நொடி நேரம் நீ பிரிந்தால்
அம்மாடி உயிரே போகும்
நீ சொன்னால் எதையும் செய்வேன்
தலை ஆட்டும் பொம்மை ஆவேன்
செத்தாலும் புதைத்தாலும்
செடியாக முளைத்தாலும்
என் வாசம் உனக்கல்லவா

ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே

நீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கணும்
இதே மாதிரி ரொம்ப நாளு நல்ல இருக்கணும்
நூறு புள்ள பெத்து
கோடி அன்பு சேர்த்து 
நீங்க வாழணும் சந்தோஷமா
இந்த ஜோடி போல
ஜோடி இல்லையென்று 
வாழ்ந்து காட்டணும் சந்தோஷமா

தாஜ் மஹால் உனக்கு
தங்கத்தில் கட்ட போறேன்
மேகத்தில் நூல் எடுத்து
சேலை நான் நெய்ஞ்சு தரேன்

என்னோட நீ இருந்தால்
வேறேதும் ஈடாகுமா
கண்டாங்கி சேல போதும்
வேறேதும் நான் கேட்பேனா

வானத்தில் நீலம் போலே
பூமிக்கு ஈரம் போலே

பிரித்தாலும் பிரியாது
முடிந்தாலும் முடியாது
நாம் கொண்ட உறவல்லவா

பாடியவர்கள்: ஹரிசரண், மதுமிதா
படம்: வேலாயுதம்
இசை: விஜய் ஆண்டனி
பாடல்: அண்ணாமலை

0 comments:

Post a Comment