20110930

மாசமா ஆறு மாசமாமாசமா ஆறு மாசமா
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு
வாரமா சில பல வாரமா
காத்துக்கிடந்தேனே பூவிழிக்கு
கண்ணுறங்கல செவி மடுக்கல
பசி எடுக்கல வாய் சிரிக்கல

கை கொடுக்கல கால் நடக்கல
அந்த வெறுப்புல ஒண்ணும் புரியல

யே மாசமா மாசமா ஏங்கி தவிச்சேன்
மாசமா ஆறு மாசமா
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு


ரோட்டுல பாக்கல பார்க்குல பாக்கல
பஸ்ஸுல பாக்கல ஆட்டோல பாக்கல
தியேட்டர்ல பாக்கல ஸ்டிரீட்டுல பாக்கல
பாத்தது எல்லாம் தொலவுல
          
காட்டுல நிக்கல மேட்டுல நிக்கல
அங்கேயும் நிக்கல இங்கேயும் நிக்கல
எங்கேயும் நிக்கல நிக்கல நிக்கல
நின்னது அவளோட மனசுல
          
நின்னாளோ பாத்தாளோ தெருவுல
நான் பாக்காம போனேனே முதலுல
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு
மாசமா ஆறு மாசமா
காத்துகிடந்தேனே பூவிழிக்கு

நம்பர் வாங்கல போனும் பண்ணல
அட்ரஸ்ஸு வாங்கல லெட்டரும் கொடுக்கல
ஃபாலோ பண்ணல தூது அனுப்புல
எப்படி வந்தா நேரில

கிண்டலும் பண்ணல சண்டையும் போடல
மொறைச்சு பாக்கல சிரிச்சு பேசல
வழி மறிக்கல கையப்பிடிக்கல
எப்படி விழுந்தா காதல்ல
அவ மூச்சாகி போனாளே உயிருல
எனக்கு மேட்ச்சாகி விட்டாளே லைஃபுல
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு
மாசமா ஆறு மாசமா
மோசமா மோசமா காதலிச்சேன்
நான் காதலிச்சேன்

கண்ணுறங்குல செவி மடுக்கல
பசி எடுக்கல வாய் சிரிக்கல

ஓ ஹோ ஓஹேஹோ ஓ ஹோ 
மோசமா மோசமா காதலிச்சேன்
இம் இம்ஹும் இம் இம் இம்ஹும்


பாடியவர்: எம். சரவணன்
படம்: எங்கேயும் எப்போதும்
இசை: சத்யா சி
பாடல்: எம். சரவணன்.


0 comments:

Post a Comment