20110910

உயிர் வாழ்கிற வரைக்கும்...தையத் தா தையத் தா தைய தைய தா
பையத் தா பையத் தா பஞ்சு முத்தம் தா

உயிர் வாழ்கிற வரைக்கும்
உனக்கே மடி கொடுப்பேன்
இனி ஓர் ஜென்மம் இருந்தால்
உனக்கே மீண்டும் பிறப்பேன்
உனது கனவில் நினைவில் உருவில்
நானே என்றும் இருப்பேன்


தையத் தா தையத் தா தைய தைய தா
பையத் தா பையத் தா பஞ்சு முத்தம் தா

நிலங்கள் உடைந்து போனாலும்
நிழல்கள் உடைவதில்லை
நேசம் பாசம் நிஜமானது

மழையில் கிளிகள் நனைந்தாலும்
சாயம் போவதில்லை
அன்பே நம் காதல் அது போன்றது
பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை
சொன்னதை செய்தாலே நிகர் ஏதும் இல்லை
நீ உறுதியானவன் என் உரிமையானவன்
பசி ருசியை பகலிரவை பகிர்ந்து கொள்ளும் தலைவன்

தையத் தா தையத் தா தைய தைய தா
பையத் தா பையத் தா பஞ்சு முத்தம் தா

”குங்குமம் அப்பி குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடு உடன் சென்றங்கு
ஆணை மேல் மஞ்சனம் ஆட்டக்
கனாக்கண்டேன் தோழி நான்”

பிறவி வந்து போனாலும்
உறவு முறிவதில்லை
உயிரை உயிரால் முறுக்கேற்றவா

உன்னை போன்ற அன்பாளன்
யாருக்கு வாய்க்கும் மீண்டும்
உடலை உடலால் குளிப்பாட்டவா
ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா
மறு கணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்
உன்னை இறுக்கி அணைக்கிறேன்
உயிர் நுரைக்க ரசிக்கிறேன்
அணு அணுவாய் உன்னைப் பிளந்து
என் ஆயுள் அடைப்பேன்

தையத் தா தையத் தா தைய தைய தா
பையத் தா பையத் தா பஞ்சு முத்தம் தா
உயிர் வாழ்கிற வரைக்கும்
உனக்கே மடி கொடுப்பேன்
இனி ஓர் ஜென்மம் இருந்தால்
உனக்கே மீண்டும் பிறப்பேன்
உனது கனவில் நினைவில் உருவில்
நானே என்றும் இருப்பேன்

தையத் தா தையத் தா தைய தைய தா
பையத் தா பையத் தா பஞ்சு முத்தம் தா


பாடியவர்கள்: சாதனா சர்க்கம், ரேஸ்மி, அமல்.
படம்: திருட்டு பயலே
இசை: பரத்வாஜ்
பாடல்: வைரமுத்து

0 comments:

Post a Comment