20091124

ஏறத்தாழ ஏழு மணி








ஏறத்தாழ ஏழு மணி
என் இமையை பறித்து சென்றாய்
(ஏறத்தாழ..)
இமையை திருப்பி கேட்டேன்
இமையை திருப்பி கொடுத்து
என் கண்கள் பறித்துசென்றாய்
கண்கள் திருப்பி கேட்டேன்
கண்கள் திருப்பி கொடுத்து
என் இதயம் பறித்து சென்றாய்
ஏதோ ஒன்று பறிக்காமல் இருக்க முடியாது உன்னால்
ஏதோ ஒன்றை இழக்காமல் இருக்க முடியாது என்னால்..
(ஏறத்தாழ..)

காதல் வந்ததும் பறந்துப் பார்த்தேன்
வானம் ஒருத் துளி மிஞ்சவில்லை
பாக்கியமெல்லாம் பூ முடிக்கலையாது
வார்த்தை ஏதும் மிஞ்சவில்லை
அழகே உன்னை நெருங்கும்போது ஆசை ஏதும் மிஞ்சவில்லை
அன்பே உன்னை நினைத்து படுத்தால் ஆடை ஏதும் மிஞ்சவில்லை
மிஞ்சியதெல்லாம் கேள்வி ஒன்றுதான்
காதல் செய்தே செத்து போவதா
செத்துக் கொண்டே காதல் செய்வதா
(ஏறத்தாழ..)
ஆணுக்குள்ளே எத்தனை உலகம்
உன்னைக் கண்டதும் விடையறிந்தேன்
பெண்ணுக்குள்ளே எத்தனைப் பூக்கள்
என்னைத்தொட்டதும் விடையறிந்தேன்
துடிக்கும் விண்மீன் எத்தனையோ
தூங்கா இரவில் விடையறிந்தேன்
கொட்டும் மழைத்துளி எத்தனையோ
கொட்ட விழித்து விடையறிந்தேன்
விடையும் தெரியா கேள்வி ஒன்றுதான்
காதல் செய்தே செத்துப்போவதா
செத்துக்கொண்டே காதல் செய்வதா
(ஏறத்தாழ..)
படம்: பேராண்மை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சாதனா சர்கம்

0 comments:

Post a Comment