20091130

ஒவ்வொரு பூக்களுமே...



ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..
(ஒவ்வொரு..)

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே..
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்..
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்..

மனமே ஓ மனமே நீ மாறிவிடு..
மலையோ.. அது பனியோ..
நீ மோதிவிடு..

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்..

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லைப் போராட்டம்?
கண்ணில் என்ன நீரோட்டம்?
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்

(மனமே..)
(ஒவ்வொரு..)

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்..
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு..

மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்..

(மனமே..)
(ஒவ்வொரு..)
(மனமே..)

படம்: ஆட்டோகிராஃப்
பாடியவர்: சித்ரா
இசை: பரத்வாஜ்
பாடலாசிரியர்: பா. விஜய்



20091129

என் வீட்டுத் தோட்டத்தில்...



என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
உன் பேரைச் சொல்லுமே

உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
என் நெஞ்சைச் சொல்லுமே

வாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே மௌனங்கள் கூடாது
வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது
வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது
ஆடிக்குப் பின்னாலே காவேரி தாங்காது
ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது
ஆசை துடிக்கின்றதே
(என் வீட்டுத்)

சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போலே சொல்லாமல் நின்றேனே
சொல்லுக்கும் அர்த்தத்துக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது
எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது
எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது
ம்ம்ம்…அனுபவமோ
(உன் வீட்டுத்)
பாடியவர்கள்: சுஜாதா, SP பாலசுப்ரமணியம்
படம்: ஜென்டில்மேன்
இசை: AR ரஹ்மான்

இரு விழியோ சிறகடிக்கும்





இரு விழியோ சிறகடிக்கும்
இமைகளிலோ வெடிவெடிக்கும்
இதயத்திலே ஒரு கனவு
உதயத்திலே வடம் பிடிக்கும்
காதலால்தானே....

மண்வெளிப் போல கிடக்கிற ஆசை
மழை துளிப் போல குதிக்கிற நாளை
விளக்கொளிப் போல துடிக்கிற நெஞ்சம்
விசத்தறிப் போல அடிக்கிற நாளை..

நானும் இந்தத் தேதி
அடி காதல் தின்ற மீதி
தோழி நீயும் வாடி
இருத் தோளும் தானே தூளி
(இரு விழியோ..)
காதலால்தானே...

ஒரு பாறை மெல்ல மெழுகானதென்ன
உனை கண்ட வேளை உயிர் பூத்ததென்ன
மழையாய் விழுந்தாய்

மூக்குத்திப் போலே ஆடாத நெஞ்சம்
நீ பார்த்த தாலே தோடாச்சு நெஞ்சம்
புயலாய் ஆனாயே..

சங்கில் ஓசைப் போலே
உன்னில் தங்கிக் கொள்ள ஆசை
மின்னல் போல கண்ணில்
உந்தன் பிம்பம் பூக்கும் ஆசை
உயிரோடு உயிர் பேச
அடிக் காதல் தானே பாஷை
இது வரமா...

மரங்களில் ஏங்கி கிரங்கிடும் தேகம்
கரங்களைத் தீண்டி உறங்கிடும் மாயம்
வெறும் சுகமா...

சுகங்களைத் தேடும் இடங்களின் ஓரம்
படங்களைப் போடும் நகங்களில் சாயம்
(இரு விழியோ..)

கதை பேசிக் கொள்ள இதழ் தீயை தூண்டு
அலை பேசிப் போலே காதோரம் சிந்து
உடும்பாய் ஆவேனே

இவள் கொண்ட மேனி மலையாளச் சோலை
இதழாலே தொட்டால் மருதாணிச் சாலை
சிவந்தே போனேனே..

உறங்கும் எனது கனவு
அதில் உனது பெயரில் கனவு
மயங்கும் எனது இரவு
உந்தன் மனது பார்க்கும் உளவு
இதைக் காண வருமோடி
ஒரு கோடி வான நிலவு
இது குளிரா..

கொதிக்கிற தேகம் குலைகிற தேகம்
இருவரின் நெஞ்சில் சமுத்திரத் தாகம்
இளம் கதிரா...

இளங்கதிர் வந்து உரசிடும் காலம்
இவர்களின் தேகம் உறங்கிடும் நேரம்
(இரு விழியோ..)

பாடியவர்கள்: வினித், சைந்தவி
படம்: பிரிவோம் சந்திப்போம்
இசை: வித்யாசாகர்

கேளடி கண்மணி...



கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற

(கேளடி கண்மணி)

எந்நாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்
கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

(கேளடி கண்மணி)

நீங்காத நேரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால்தானே உண்டானது
கால் போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது

(கேளடி கண்மணி)
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்
படம்: புது புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா.

காற்றின் மொழி ..




காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதல் மொழி விழியா இதழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை
(காற்றின் மொழி)

காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவித் திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

(இயற்கையின் மொழிகள்)


வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்

(இயற்கையின் மொழிகள்)

பாடியவர்: பல்ராம் & சுஜாதா
படம்: மொழி
இசை: வித்யாசாகர்




நினைத்து நினைத்து பார்த்தேன் ...




நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப்படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே?
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்பிடி சொல்லுவேன்
உதிர்ந்து போன மலர்களின் வாசமா
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்பிடி சொல்லுவேன்?
உடைந்து போன வளையலின் பேசுமா
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னே தூக்கம் கலைந்ததே!

(நினைத்து)

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா?
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?

தொடந்து வந்த நிழலின் பிம்பம் வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் பார்த்தும்
நம்பவே இல்லை நானும்
ஒரு தருணம் எதிரில் தோன்றுவாயென
நானும் வாழ்கிறேன்.

(நினைத்து)
பாடல்:- நா.முத்துக்குமார்
படம்:- 7/G ரெயின்போ காலனி
இசை:- யுவன் சங்கர்ராஜா


20091124

ஏனோ ஏனோ பனித்துளி






ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
கூறாய் நீ கூறாய் உனை பூட்டிக் கொண்டாயே
வாராய் நீ வாராய் இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே
(ஏனோ..)

மௌனம் என்னும் சட்டை வீசி என்னைக் கீறாதே
மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார் பக்கம்
ஏதோ ஒன்று என்னைத் தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ..
(ஏனோ..)

நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா
திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
காற்றைப்போலே தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்
ஹோ ஹோ
(ஏனோ..)




பாடியவர்கள்:  சுதா ரகுநாதன், ஆண்ட்ரியா
படம்: ஆதவன்
பாடல் : தாமரை
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

அச்சம் மடம் நாணம்




அச்சம் மடம் நாணம் எனை விட்டுப் போகவேணும் நீவா
தன்னந்தனித்தீவு நீ தங்கிச்செல்லும் தேரு நான் தான்
அடிக்கடி என் இடையில் நெருக்கடி நீயும் கொடு
தினந்தோறும் யுத்தமாய்
என் ஆடை களை என் ஆசை களை
என் இளமையும் தான் என்றும் இனிது
(அச்சம்..)

எங்கெங்கும் இன்பம் உண்டு
அங்கங்கு கைகள் கொண்டு
அங்கத்தில் தேடும் வித்தை நீ அறிவாய்
தேகத்தில் மச்சம் தேடி தாகத்தின் உச்சம் நாடி
மோகத்தை வெல்வாய் கூட நீ தொடர்வாய்
இரவோடு இரவாகப் பூவோடு உறவாடு
சலிக்காமல் விளையாடவா வா வா
என்னோடு காணாத பேரின்பம் வேறேது
மூழ்காமல் நீராட வா
ஆரம்பக் கல்வி நித்தம் ஆகட்டும் அதுவே நித்தம்
தரைத்தளம் மிதக்கலாம் கலந்திடவா
(அச்சம்..)

தீராதே எந்தன் ஹீரோ
உன் முன்னால் நானும் ஜீரோ
ஒன்றாக என்னை சேர்க்க நீ ரெடியா
யார் யாரோ என்னைத் தீண்ட
வந்தானே என் ஆசைப்பொங்க
யாருக்கும் அச்சம் இல்லை நீ வர்ரியா
சொந்தங்கள் பந்தங்கள் நண்பர்கள் எல்லாரும்
எந்நாளும் எப்போதும் போர் போர் போர்
உன்னோடும் என்னோடும் உண்டாகும் சந்தோஷம்
எங்கேயும் எப்போதும் ஷேம்
இளமைக்கு குட்பாய் சொல்லி
இளமைக்கு வெல்கம் சொல்லு
விண்ணைத்தொடு வா வா வா
(அச்சம்..)

படம்: ஜக்குபாய்
இசை: ரஃபி
பாடியவர்கள்: சுசித்ரா

துப்பாக்கி பெண்ணே




துப்பாக்கி பெண்ணே சூடானக் கண்ணே
உலகம் பிறந்தது உனக்காக
நாளைக்கு உலகம் யாருக்குச் சொந்தம்
இன்றைக்கு வாழ்வோம் நமக்காக
காற்றைத்தான் நிற்கச்சொல் ஆற்றையும் நிற்கச்சொல்
குயிலை மட்டும் பாடச்சொல்
ஹாப்பி பர்த் டே
(துப்பாக்கி..)


இதயம் பாட்டிசைக்க இளமை ஆர்ப்பரிக்க கொண்டாடு கொண்டாடு
கிச்சிப்புடி மட்டும் மல்லடி டி
குங்ஃபுப் ஃபைட்டும் கற்றுக்கொள்ளடி டி
ஆடைக்கட்ட மட்டும் அல்லடி ஆள்வதற்கும் கற்றுக்கொள்ளடி டி
நீ துணியல்ல மலர் என்று போராடு பெண்ணே
(துப்பாக்கி..)


எதிர்த்தால் கதை முடிப்போம்
நினைத்தால் போர்த்தொடுப்போம்
ஜீன்சல்ல சிட்டுக்குருவி வி சிறகடித்து விண்ணை வெல்லடி
வாடிக்கட்டும் பட்டுச் சேலையே யே
மியூசியத்தில் வைக்கச்சொல்லடி டி
புது வீட்டில் புது வாழ்க்கைக் கொண்டாடு பெண்ணே
(துப்பாக்கி..)


படம்: பேராண்மை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: ஃபெஜி, மேகா, ஷாலினி, சுவி

உலகில் எந்தக்காதல் உடனே ஜெயித்தது




உலகில் எந்தக்காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதலாகாது
எல்லாமே சந்தர்ப்பம் கற்பிக்கும் தப்பர்த்தம்
(உலகில்..)

நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு
அவன் இல்லாது அடுத்தவன் வாழ்வை ஏற்பதுப் பெரும்பாடு
ஒரு புறம் தலைவன் மறுபுறம் தகப்பன்
இருட்டொளி எறும்பானாய்
பாசத்துக்காக காதலைத் தொலைத்து ஆலையில் கரும்பானாய்
யார் காரணம் யார்
யார் பாவம் யாரைச் சேரும் யார்தான் சொல்ல 
கண்ணீர் வார்த்தா கண் நீர் ஆகும்
சுற்றம் செய்த குற்றம் தானே
உயிரில் பூக்கும் காதல் உணர்வின் வாழ்நிலை
உணர்வைப் பார்ப்பதேது உறவின் சூழ்நிலை

மனம் என்னும் குளத்தில் விழியென்னும் கல்லை
முதன் முதல் எறிந்தாளே
அலை அலையாக ஆசைகள் எழும்ப அவள் வசம் விழுந்தானே
நதி வழிப்போனால் கரைவரக்கூடும் விதிவழிப்போனானே
விதை ஒன்றுபோட வேறொன்று முளைத்த கதை என்று ஆனானே
என் சொல்வது என் சொல்வது
தான்கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தாய்
கற்பைப்போலே நட்பைப் பார்த்தான்
காதல் தோற்கும் என்றாப்பார்த்தான்
(உலகில்..)


பாடியவர்: ஹரிஹரன்
படம்: நாடோடிகள்
இசை:சுந்தர் சி பாபு

ஒரு சின்னத் தாமரை








ஒரு சின்னத் தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடித் தைக்கின்றதே
இதை உண்மை என்பதா
இல்லை பொய்தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே

என் ரோமக்கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப்புன்னகை சுடுதே
என் காட்டுப்பாதையில் நீ ஒற்றைப் பூவடா
உன் வாசம் தாக்கியே வளர்ந்தேன் உயிரே

என் பெயர் கேட்டாலே அடி பாறையும் பூப்பூக்கும்
உன் காலடித் தீண்டிய வார்த்தைகள் எல்லாம்
கவிதைகளாய் மாறும்

உன் தெரு பார்த்தாலே என் கண்கள் அலைமோதும்
உன் வாசல் தேடிப் போகச் சொல்லிக் கெஞ்சுது என் பாதம்
என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள்
உன்னாலே என் வீட்டின் சுவரெல்லாம் ஜன்னல்கள்
(ஒரு சின்ன..)

உன் குரல் கேட்டாலே அங்கு குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்தக் காற்றுகள் மட்டும் மோட்சத்தினைச் சேரும்
அனுமதிக் கேட்காமல் உன் கண்கள் எனை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம் நொடியில் குடை சாயும்

உன் கைகள் கோர்க்காமல் பயணங்கள் கிடையாது
உன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது
(ஒரு சின்ன..)




பாடியவர்கள்: கிரிஷ், சுசித்ரா
படம்: வேட்டைக்காரன்
இசை: விஜய் ஆண்டனி

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு...





ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகின்ற பொழுது
ஒரு வானத்தை தொடுகின்ற உணர்வு
ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்திலும் வரும் ஒடுக்கம்
நின்றாலும் கால்கள் மிதக்கும்
(ஒரு நாளுக்குள்..)

நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்
நீ காதலா இல்லை கடவுளா
புரியாமல் திணறி போனேன்
யாரேனும் அழைத்தால் ஒரு முறைதான்
நீ தானோ என்றே திரும்பிடுவேன்
தினம் இரவினில் உன் அருகினில்
உறங்காமல் உறங்கி போவேன்
இது ஏதோ புரியா உணர்வு
இதை புரிந்திட முயன்றிடும் பொழுது
ஒரு பனி மலை ஒரு எரிமலை
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்
(ஒரு நாளுக்குள்..)

நதியாலே பூக்கும் மரங்களுக்கும்
நதி மீது இருக்கும் காதல் இல்லை
நதி அறியுமா நெஞ்சம் புரியுமா
கரையோர கனவுகள் எல்லாம்
உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டாள்
நீ பார்க்காமல் உன்னை மறக்கலாம்
இனி காதல் கனவுகள் பிறக்கும்
தன் வாசனை பூ அறியாது
கண்ணாடிக்கு கண் தெரியாது
அது புரியலாம் பின்பு தெரியலாம்
அதுவரையில் நடப்பது நடக்கும்
( ஒரு நாளுக்குள்..)


பாடியவர்: கார்த்திக்
படம்: யாரடி நீ மோகினி
இசை: யுவன் ஷங்கர் ராஜா

பூவே பூவே காதல் பூவே








பூவே பூவே காதல் பூவே எந்தன் நெஞ்சில் பூத்தாயே
போதும் போதும் எண்ணம் போதும் வாழ்வில் தேனை வார்த்தாயே
காதல் தேசம் ஒன்றில் தானே பூக்கள் வண்டை வென்றிடுமே
காதல் மட்டும் என்னை வென்றால் சுற்றும் பூமி நின்றிடுமே
(பூவே..)

நியூட்டன் சொன்ன விதி பொய்யாய் போனதடி
காதல் வந்தவுடன் கால்கள் மிதக்குதடி
இது இளமை காணும் மாற்றம்
இனி பூமி புதிய தோற்றம்
தனியாக சிரிப்போமே கனவோடு ரசிப்போமே
பசி தூக்கம் மறப்போமே பறப்போமே
(பூவே..)

கூர்மை பளப்பளக்கும் காதல் இருப்புறமும்
கூராய் மனம் கிழிக்கும்
இந்த காதல் செய்யும் காலம்
அந்த வலிகள் இன்ப மாயம்
உன் தோளில் சாய்ந்தாலே உற்சாகம் தோன்றிடுமே
உயிர் பூக்கள் மலர்ந்திடுமே உயிரே வா
(பூவே..)

படம்: சித்து ப்ளஸ் டூ
இசை: தரன்
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, சின்மயி

அது ஒரு காலம் அழகிய காலம்...











அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்

ஹே ஜோடியாய் இருந்தாய்
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா

ஹே துள்ளித்தான் திரியும்
பிள்ளையாய் இரு நீயும்
துன்பம்தான் மறந்து
பட்டம் போல் பற எப்போதும்
(அது ஒரு..)

இதயம் என்பது வீடு
ஒருத்தி வசிக்கும் கூடு
அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள்
உலகம் என்பது மேடை
தினமும் நடனம் ஆடு
புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு
நெஞ்சோடு பாரம் கண்டால்
தூரத்தில் தூக்கிப்போடு
நெஞ்சோடு ஈரம் கண்டால்
இன்னொரு பெண்ணைத்தேடு
ஓடம் போகும் பாதை ஏது
வானில் மிதக்கலாம்
வலிக்கிற வார்த்தை ஏது
எண்ணம் மறக்கலாம்
எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன்
அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாய்வேன்
(அது ஒரு..)

ஓ.. அவளைப் பிரிந்து நானும் உருகும் மெழுகு ஆவேன்
அவளின் நினைவால் எரிந்தேனே நானே
ஓ பழகத் தெரியும் வாழ்வில் விலகத் தெரிய வேண்டும்
புரிந்தால் மனதில் துயரில்லை தானே
கல்வெட்டாய் வாழும் காதல்
அழித்திட வேண்டும் நீயே
காற்றாற்றில் நீச்சல் காதல்
கைத்தர வந்தேன் நானே
ஏற்காமல் போனாள் ஏனோ
சோகம் எதற்குடா
ஆறாத காயம் தானோ
காலம் மருந்துடா
உலகின் நடுவே தனியானேன் நானே
அவளால் அழுதேன் கடலானேன் நானே
(அது ஒரு..)








பாடியவர்: ஹரிசரன்ப்ரேம்ஜி அமரன்
படம்: அதே நேரம் அதே இடம்
இசை: ப்ரேம்ஜி அமரன்