20111225

நல்ல நண்பன் வேண்டும் ...

நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணமும் நினைக்கின்றதா
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டிச் செல்ல துடிக்கின்றதா

இறைவனே இறைவனே
இவனுயிர் வேண்டுமா
எங்கள் உயிர் எடுத்துக் கொள்
உனக்கது போதுமா

இவன் எங்கள் ரோஜாச் செடி
அதை மரணம் தின்பதா
இவன் சிரித்து பேசும் நொடி
அதை வேண்டினோம் மீண்டும் தா

உன் நினைவின் தாழ்வாரத்தில்
எங்கள் குரல் கொஞ்சம் கேட்கவில்லையா
மனமென்னும் மேல்மாடத்தில்
எங்கள் ஞாபங்கள் பூக்கவில்லையா

இறைவனே இறைவனே
உனக்கில்லை இரக்கமா
தாய் இவள் அழுகுரல்
கேட்டபின்னும் உறக்கமா

வா நண்பா வா நண்பா
தோள்களில் சாயவா
வாழ்ந்திடும் நாளெல்லாம்
நான் உன்னைத் தாங்க வா


பாடியவர்: ராமகிருஷ்ணன், மூர்த்தி
படம்: நண்பன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: நா. முத்துக்குமார்

0 comments:

Post a Comment