20110830

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்...




சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் தவிக்க வைத்தாய் 
எட்டாத இடத்தில்
என் நெஞ்சை பறக்க வைத்தாய் 
கிட்டதட்ட கரைய வைத்தாய்
கிட்டாமல் அலைய வைத்தாய் 
திட்டாமல் திட்டித்தான்
உன் காதல் உணர வைத்தாய் 
ரயில் வரும் பாலமாய்
ஐயோ எந்தன் இதயம் 
தடதட தடவென துடிக்க 

நீ ஒரு நாள் ஒருநாள் விதையாய் 
வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே 
விழிபார்க்கும் போதே மரமாய்
இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே
அட இனி என்ன நடக்கும் 
மனம் நடந்ததை நடிக்கும்
ஒரு குட்டிப்பூனை போல
காதல் எட்டிப் பார்க்குதே
அது அச்சம் மடம் நாணம் எல்லாம்
தட்டிப் பார்க்குதே பார்க்குதே
பார்க்குதே தோற்க்குதே

அந்த கடவுள் அடடா ஆண்கள்
நெஞ்சை மெழுகில் செய்தானடி
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை
கண்டால் உருகிட வைத்தானடி
இந்த மௌனத்தின் மயக்கம்
ரொம்ப பிடிக்குது எனக்கும்
உன் பேச்சும் மூச்சும் என்னைத்
தாக்கி விட்டுச் சென்றதே
நீ விட்டுச் சென்ற ஞாபகங்கள்
பற்றிக் கொண்டதே கொண்டதே
கொண்டதே வென்றதே

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் தவிக்க வைத்தாய் 
எட்டாத இடத்தில்
என் நெஞ்சை பறக்க வைத்தாய் 

பாடியவர்கள்: சின்மயி, சத்யா
படம்: எங்கேயும் எப்போதும்
இசை: சத்யா.சி
பாடல்: நா முத்துக்குமார்

0 comments:

Post a Comment