வா வா நிலவப்புடிச்சித்தரவா
வெள்ளி பொம்மையாக்கித்தரவா
ஓஹோ விடியும்போதுதான் மறைஞ்சிப்போகுமே
கட்டிப்போடு மெதுவா
வா வா நிலவப்புடிச்சித்தரவா
வெள்ளி பொம்மையாக்கித்தரவா
ஓஹோ விடியும்போதுதான் மறைஞ்சிப்போகுமே
கட்டிப்போடு மெதுவா
வானத்தில் ஏறி ஏணிக்கட்டு
மேகத்தை அள்ளி மாலைக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ
கவலை நம்மை சில நேரம் கூரைப்போட்டுக்கொண்டாடும்
நீ என்னைத் தீண்டி வாழும்போதே
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலைச்சேரும் நதியாவும் தன்னைத்தொலைத்து உப்பாகும்
ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம் போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும்
அதில் முதலும் இல்லை
முடிவும் இல்லை
புரிந்தால் துயரம் இல்லை
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா நிலவப்புடிச்சித்தரவா
வெள்ளி பொம்மையாக்கித்தரவா
ஓஹோ விடியும்போதுதான் மறைஞ்சிப்போகுமே
கட்டிப்போடு மெதுவா
ஆஹா... ஹா ஹா இரவைப்பார்த்து மிரளாதே
இதயம் வேர்த்துத் துவளாதே
இரவுகள் மட்டும் இல்லையென்றால்
நிலவின் அழகுத் தெரியாதே
கனவை நீயும் நம்பாதே கலைந்து போகும் மறவாதே
கனவில் பூக்கும் பூக்களை எல்லாம்
கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்ததுபோனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா நிலவப்புடிச்சித்தரவா
வெள்ளி பொம்மையாக்கித்தரவா
ஓஹோ விடியும்போதுதான் மறைஞ்சிப்போகுமே
கட்டிப்போடு மெதுவா
பாடியவர்: ராகுல் நம்பியார்
படம்: நான் மகான் அல்ல
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: நா. முத்துக்குமார்
2 comments:
Thanks shakila
Note:
shakila please remove the word verification box in the comment box
i remove the word verification box in the comment box. o.k.
Post a Comment