20101214

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்...


சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்
அவள் நேரத்தில் வருவாளா காக்கத்தான் விடுவாளா
பார்த்தாலே முறைப்பாளா பால் போலச் சிரிப்பாளா
கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா
கொஞ்சிக் கொஞ்சிக் காதல் செய்து கொல்வாளா

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்


கட்டுத் தறியின்றி எனதுள்ளம் 
உனை எண்ணிக் கொண்டு
அங்கும் இங்கும் கும்மி கொட்டுதே
சொல்ல மொழி இன்றி தமிழ்சொற்கள் 
எனை விட்டு விட்டு
அந்தரத்தில் அம்மி கொத்துதே

காதல் தெருவிலே எனதாசை அலையுதே
நீங்கா நினைவிலே நிழல் கூட வெளுக்குதே
குரலாலே என்னில் குடியேறிக்கொண்ட
கொலைகாரி உந்தன் ஞாபகங்கள் என்னைக் குத்துதே
சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

கங்கை நதி வெள்ளம் 
சிறு சங்குக்குள்ளே சிக்கிக் கொண்டு
அக்கரைக்கு செல்ல எண்ணுதே
சின்னம் சிறு பிள்ளை 
ஒரு சொப்பனத்தை வைத்துக் கொண்டு
கண்ணுறக்கம் கெட்டு நிக்குதே

நீ என் எதிரிலே 
வரவேண்டும் விரைவிலே
நேரில் வரும் வரை 
முகம் காட்டு கனவிலே

மெதுவாகச் செல்லும் கடிகாரமுள்ளும்
உனைக் காணச் சொல்லி 
ஹையையையோ நச்சரிக்குதே 
சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்
அவள் நேரத்தில் வருவாளா காக்கத்தான் விடுவாளா
பார்த்தாலே முறைப்பாளா பால் போலச் சிரிப்பாளா
கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா
கொஞ்சிக் கொஞ்சிக் காதல் செய்து கொல்வாளா

பாடியவர்: கார்த்திக்
இசை: வித்யாசாகர்
படம்: காவலன்.
பாடல்: யுகபாரதி

1 comments:

Anonymous said...

என்னைத் தாலாட்ட வருவாளா- பாட்டைப் போல இந்த பாட்டும் சூப்பர் ஹிட் ஆகும்.

Post a Comment