20101231

நீதானே எந்தன் பொன்வசந்தம்...

நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
ஆஹா...
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவக் குயில்கள்
உன் ஆடை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் வீசும் மொழிகளில் பிறையும் பௌர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் என் நாளும்

நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் கோடி நினைவு
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது போகும் வரையிலும் தென்றல் கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் என் நாளும்

நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்


பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியம்
படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து

0 comments:

Post a Comment